சனி, 18 செப்டம்பர், 2010

யாழ் மாநகர போக்குவரத்துச் சேவை விரைவில் ஆரம்பம்

இலங்கை இந்திய நட்புறவு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 05 நடுத்தர பேரூந்துகள் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். 
மாநகரசபை தனது வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக சபை எல்லைக்குட்பட்ட மக்களின் போக்குவரத்துக்கு வாகன வசதிகளற்ற இடங்களுக்கு போக்குவரத்து சேவைக்காக இவ் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் காலையிலும் மற்றும் பிற்பகலிலும் சென்று வருவதற்கு ஏற்ற விதத்தில் எமது மேற்படி போக்குவரத்துச்சேவை திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். தூர இடங்களுக்கு பிரயாணம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாநகரசபையின் போக்குவரத்துச் சேவை ஆரம்பத்தில் பரீட்சார்த்தமாக காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக