புதன், 8 செப்டம்பர், 2010

தஸ்லிமா நஸ்ரீன் தலைக்கு விலை நிர்ணயித்தவருக்கு சம்மன்

சர்ச்சைக்குரிய நூலை எழுதிய வங்காளதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனின் தலையை துண்டிப்பவருக்கு 5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்குவதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் மவுலானா தவுகீர்ரஸா அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பரேலியில் உள்ள கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வரும் 24-ந் தேதி, கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு மவுலானா தவுகீர்ரஸாவுக்கு சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட் யோகேந்திரராம் குப்தா உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக