செவ்வாய், 28 செப்டம்பர், 2010

முப்படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தமிழ் மொழியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு

இலங்கை முப்படையினர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
படைத்தரப்பைச் சேர்ந்த அனைவருக்கும் தமிழ் மொழிப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு கோதபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் கடமையாற்றி வரும் இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு மொழியறிவு மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி நெறியை பூர்த்தி செய்வோருக்கு மொழித் திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக