ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

சிங்கள மக்களும் முருகனைத் தரிசனம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்த

நல்லூர் கந்த கோட்டத்தில்
கதிர்காமத்தை நினைவுபடுத்தும் வகையில் கரை புரளும் சிங்கள பக்தர்கள்
(நல்லூரிலிருந்து அ. கனகசூரியர்)
இலங்கையிலுள்ள பிரதான நெடுஞ்சாலைகளுள், இப்போது இருபத்து நான்கு மணி நேரமும் பயன்பாட்டுக்குரியதாக வாகனங்களால் நிரம்பிக் காணப்படும் ஒரு போக்கு வரத்துப் பாதை என்றால், அது ஏ-9 என்று தான் சொல்ல வேண்டும். இலங்கையின் வட பகுதியுடன் ஏனைய பகுதிகளை இணைக்கும் பிரதான வீதியாக விளங்கும் ஏ-9 பாதை ஒரு காலத்தில் உறக்கத்திலிருந்தது என்பதை எவருமே மறந்துவிட மாட்டார்கள். இப்பொழுது இந்தப் பாதை இருபத்து நான்கு மணி நேரமும் கலகலத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து பெருமளவு வாகனங்கள் பயணிகளுடனும், பொருட் களுடனும் வட பகுதியை நோக்கி வரிசை வரிசையாக வந்து கொண்டி ருக்கின்றன.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடந்த ஜுலை மாதத்திலி ருந்து வடபகுதியிலுள்ள இந்து ஆல யங்களில் மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாவிட்ட புரம் கந்தன், தொண்டமானாறு சந்நிதி முருகன், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் மகோற்சவங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இப்போது நல் லைக் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.
மகோற்சவ காலத்தில் முருகப் பெருமானைத் தரிசித்து, அவனது திருவருளைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற பெரு விருப்பில் ஏராளமான மக்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகள் முற்றாகவே நீங்கிய நிலையில் அமைதியானதும், மகிழ்ச்சி கரமானதுமான சூழ்நிலையிலுள்ள இன்றைய வட பகுதி, தினந்தோறும் வெளியூர்களிலிருந்து வருகைதரும் தமிழ், சிங்கள மக்களால் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் மக்களாலும் நிரம்பி வழிகிறது என்று சொல்வது பொருத்தமானது.
வட பகுதியிலுள்ள பிரதேசங்களில் ஒன்றான நல்லூர் வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் கொண்டது. இலங்கையிலுள்ள கந்தகோட்டங்களுள் முதன்மையான நல்லைக் கந்தன் ஆலயம் இங்கு அமைந்திருப்பதுடன், இந்த ஆலயத்தைச் சூழந்துள்ள நிலையில் மேலும் பல திருக்கோயில்கள் அமைந்திருப்பதும், இந்தப் புனிதமான பிரதேசத்திலிருந்து ஒலிக்கும் ஆலய மணியோசை இந்து மக்களுக்கு எந்நேரமும் இறை சிந்தனையைத் தோற்றுவிப்பதும் தெய்வீகமானது.
ஐந்தாம் குரவராகப் போற்றப்படும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த - பெருமகனார் நாவலர் பெருமான் அவதரித்த பெருமைக்குரியது நல்லூர். யாழ்ப்பாணத்து சித்தர் பரம்பரையில் தோன்றிய கடையிற் சுவாமிகள் நடமாடிய புண்ணிய பூமி இது.
இவரது சீடரான செல்லப்பா சுவாமிகள் நல்லூர் தேரடியில் வாழ்ந்தவர். இவரது சீடரான யோகர் சுவாமிகளும் நல்லைக் கந்தனின் திருவருள் பெற்றவர். இத்தகைய ஞானபரம்பரையினருக்கும் நல்லூருக்கும் இடையிலான தொடர்பு மேன்மையானது, மகத்துவமானது.
இத்தகைய தனித்துவமிக்க நல்லூரில் அன்று நாவலர் மணி மண்டபம் தோற்றம் பெற்றது. இலங்கையின் ஒரேயொரு சைவ ஆதீனமான நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீதுர்க்கா தேவி மணி மண்டபம் உட்பட மற்றும் பல சமய, கலாசார மண்டபங்களும், நினைவாலயங்களும், மடங்கள் என்பனவும் நல்லூருக்கு நற் சிறப்பை ஏற்படுத்துகின்றன. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனையும் நல்லூர் ஆலய சூழலில் அமைந்திருக்கிறது.
நல்லூர் கந்தன் ஆலயத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. உற்சவம் நிறைவாக தினமும் முருகப் பெருமான் உள் வீதி, வெளி வீதி உலாவந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறார்.
தினந்தோறும் காலை நேரத்தில் முருகன் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருவதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
இம்முறை நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் முருகப் பெருமானை தரிசிக்க வருகைதரும் மக்களது தொகை கடந்த காலங்களை விட மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. இப்போது வட பகுதியில் நிலவும் சிறப்பான சூழ்நிலை காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் இந்து மக்களுடன் இணைந்து பெருமளவு தென் பகுதி பெளத்த சிங்கள மக்களும் நல்லூர் ஆலயத்தி ற்கு, வந்து முருகனைத் தரிசனம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் பெற்று, அவற்றை நெற்றியில் அணிந்த வண்ணம் செல்வதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. இந்தக் காட்சி கதிர் காமத்திருத்தலத்தை நினைவூட்டுகிறது என்பது மட்டுமல்ல அனைவருமே இந்து மக்கள் தானா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வெளி வீதியில் பாதணிகளுடன் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும் பாதணிகள் இன்றியே காணப்படுகின்றனர்.
வெளி யிடங்களிலிருந்து நல்லூர் ஆலயத்தை வந்தடையும் சகல வீதிகளிலும், ஆல யத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில், வாகனங்களை கட்டுப்படுத் தும் வகையில் தடை நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் யாழ். மாநகராட்சி மன்றத் தொண்டர் களுடன், பொலிஸாரும், இராணுவத் தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இங்கும், ஆலய வீதியிலும் கடமையி லுள்ள பொலிஸாரும், இராணுவத்தின ரும் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களுடன் நட்புறவு ரீதியாகவே அன்பாகவும் பண்பாகவும் பழகி வரு வதை காணக் கூடியதாக இருக்கிறது.
பெரும்பாலான பொலிஸார் மக்களுடன் தமிழில் பேசி வருவதையும் காண முடிகிறது. நல்லூர் ஆலயத்தில் மாலை நேர உற்சவம் நிறைவுபெற்ற பின்னர் தினந்தோறும் மாலை 6.30 மணியளவில் ஆலய சூழலில் பல சிறப்பு நிகழ்ச்சி கள் ஆரம்பமாகி நடைபெறுகின்றன. ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந் துள்ள நல்லை ஆதீனத்தில் மகாபார தக் கதை தொடர் கதாப்பிரசங்கம் நடைபெற்று வருகிறது.
ஆலயத்தின் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்கு திரும்பும் மூலைப் பகுதியில் அமைந் துள்ள ஸ்ரீதுர்க்கா தேவி மணி மண்ட பத்தில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஆலய தெற்கு வீதியில் அமைந் துள்ள நாவலர் மணி மண்ட பத்தில் தினந் தோறும் மாலை 3 மணி க்கு சமயச் சொற்பொழிவு இடம் பெறு கிறது. ஆலய தெற்கு வீதியில் இரவில் பெரிய திரையிட்டு பக்தி திரைப்படங் கள் காணப்பிக்கப்படுகின்றன.
நல்லூர் ஆலயத்தின் தெற்குப் பக்கத் தில் பிரமாண்டமான இராஜ கோபுரம் அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்ப மாகி, இப்பொழுதும் கட்டிட வேலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஆலயத்தின் தெற்கு வீதியில் யாழ். மாநகராட்சி மன்றத்தின் உற்சவ காலப் பணிமனையொன்று அமைக்கப்பட்டு, அடியார்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இதன் அருகே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை நிலையமொன்றும் அமைந்துள்ளது.
யாழ். மாநகராட்சி மன்றத்தினர் நீர் தெளிக்கும் வாகனத்தின் (பவுசர்) உதவியுடன் அடிக்கடி ஆலயத்தை சுற்றியுள்ள வெளி வீதியில் நீர் தெளி த்து குளிர்மைப்படுத்தி வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்தின் சைவ சமய விவகாரக்குழு வருடந்தோறும் நல்லைக் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவின் போதுநல்லைக் குமரன் மலர்என்ற பெயரில் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வருட சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட். 30 ஆம் திகதியன்று காலை யாழ். நாவலர் வீதியிலுள்ள நாவலர் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்பில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்டு வரும் காலாண்டிதழானஇந்து ஒளிசஞ் சிகையின் நல்லைக் கந்தன் மகோற்சவ சிறப்பிதழின் வெளியீடும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று நண் பகல் நல்லூரிலுள்ள ஸ்ரீதுர்க்கா தேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ( 5ஆமதிகதி) 22 ம் நாள் தண்டாயுதபாணி உற்சவமாகும். இதனை மாம்பழத் திருவிழா என்றும் அழைப்பதுண்டு. நாளை மறுதினம் (7 ஆம் திகதி) இரதோற்சவமும் 8 ம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெற்று, மறு நாள் 9 ஆம் திகதி பூங்காவன உற்சவத்துடன் இவ்வருட மகோற்சவப் பெருவிழா நிறைவு பெறுகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக