குழந்தையுடன் பெண்ணை காரில் கடத்திய கும்பல் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து ரோட்டில் பிணத்தை வீசியது. காரிலிருந்த குழந்தையையும் வீசி விட்டு சென்றது. இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் பலியானார்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒரு சுமோகார் வேகமாக சென்றது. செங்கமலையம்மன் கோவில் அருகே அந்தகார் வரும்போது காரிலிருந்த கும்பல் கதறி அழுதபடி இருந்த ஒரு பெண் குழந்தையை ரோட்டில் தூக்கி வீசியது. சற்று தள்ளி ஒரு பெண்ணையும் தூக்கி வீசினர்.
இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். கன்னிவாடி போலீசார் விரைந்து வந்து காயங்களுடன் கிடந்த அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சற்று தள்ளி கிடந்த பெண் அருகே சென்ற போது அந்த பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்பக்கம் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் அந்த பெண் உடல் கிடந்தது. கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
யாரோ ‘மர்ம’ ஆசாமிகள் குழந்தையுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்து கொடூரமாக இந்த கொலையை செய்து பிணத்தை ரோட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணையும், குழந்தையையும் காரில் இருந்து வீசியதை நேரில் பார்த்த மலையாண்டிபுரத்தை சேர்ந்தலட்சுமி (வயது32) என்ற பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக