செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பின் 18வது திருத்தத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக