சனி, 18 செப்டம்பர், 2010

‘உரைகல்’ வாராந்தப் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

இச்சம்பவம் 13ஆம் திகதி நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைந்துள்ளது இப்பத்திரிகை அலுவலகம். ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஒருவரே இத்தாக்குதலுக்குப் பின்னால் உள்ளதாக பத்திரிகையின் ஆசிரியர் ரஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு அமைப்பில் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாலேயே தனது பத்தரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக ’விகல்ப’ எனும் இணையத்தளத்திற்கு ’உரைகல்’ ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ரஹ்மத்துல்லாவின் வீட்டை உடைத்து அவரைத் தாக்கிய ஆயுததாரிகள் அவரைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்ததாகவும், பொலிஸில் அவர் முறைப்பாடு செய்திருந்தும் பொலிஸார் அது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நடைபெற்ற தாக்குதல் குறித்து பொலிஸில் முறையிட்ட போதும் பொலிஸார் எதுவித நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் இம்முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ரஹ்மத்துல்லா பொலிஸில் தான் முறையிடவில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக