புதன், 15 செப்டம்பர், 2010

’ஆட்டோ’ கொள்ளையர்கள் இருவர் வவுனியாவில் கைது

வவுனியா பகுதியில் முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்றை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் குறித்த முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரின் வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து இருப்தையாயிரம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி நேற்று கொள்ளையிடப்பட்டது.
இதனையடுத்து வவுனியா பஸ் தரிப்பிடத்தில் வைத்து குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக