வெள்ளி, 10 செப்டம்பர், 2010

அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவரின் நிலை

யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் சுயவிருப்பத்திற்கு மாறாக மனிதாபிமானம் இல்லாமல் தாக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களில் வலுக்கட்டாயத்தின் பெயரில் பலவந்தமாக ஒப்பம் இடப்பட்டு கை,கால்களுக்கு விலங்கு பூட்டி நான்கு குடிவரவு அதிகாரிகளினால் தாக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.
அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினால் உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று ஒரு வாரத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கையினால் எந்த வேலையும் செய்யமுடியாத நிலையில் உள்ளார். அத்துடன் அவரது வலது கை சுட்டுவிரல் நகம் அகற்றப்பட்ட நிலையில் அந்த விரலில் உணர்ச்சியற்ற நிலையிலும் உள்ளது.
இதுதான் இன்றைய பிரித்தானியாவில் இருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்களின் நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக