ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது: ஜெ., கடும் தாக்கு

:"தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: சில தினங்களுக்கு முன், சென்னை இ.சி.ஆர்., சாலையில் வாகனங்கள் மோதிக் கொண்டது தொடர்பாக, தீபா என்ற பெண்ணிற்கும், முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், அந்த பெண்ணும், அவரது சகோதரரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த தகராறில், அந்த பெண்ணிற்கு ஆதரவாக செயல்பட்டதற்காக, சென்னை கிண்டி பகுதியில், பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள் 150க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ரவுடி கும்பல் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. வரவேற்பறை பகுதியில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளது. வேளச்சேரியில் உள்ள தீபா வீட்டிற்கும் சென்று அவரை கடுமையாக தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்து, அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அண்ணாநகரில் உள்ள ஒருவரது வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ளவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த துணிகரத் தாக்குதலை கண்ட சென்னை நகர மக்கள், ஓட்டல் ஊழியர்கள், ஓட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக நீண்ட தாமதத்திற்கு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல், கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கு, பனையூர் இரட்டை கொலை வழக்கு எந்த கதியில் இருக்கிறதோ, அந்த கதியைத்தான் இந்த வழக்கும் சென்றடையும்.பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது. விரைவில் நடக்கும் தேர்தலில், அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில்
சுரேஷ் G - சொக்கநாதபுரம்.சிவகங்கை,இந்தியா
2010-09-05 07:30:41 IST
mohamed ali , trichy. உங்களுக்கு பதில்: தருமபுரி பஸ் எரிப்பிற்கு பிறகு, 5 வருடம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் இந்த வழக்கு ஒன்றுமே இல்லாமல் செய்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதே நேரம் ஜெயலலிதா சொல்லி அந்த சம்பவம் நடந்தது போல் அவர் மேல் குற்றம் சொல்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல. அவர் கட்சி தொண்டர்கள் கட்சி தலைமைக்கு விசுவாசியாக காட்டிகொள்வதற்காக, செய்த மிகப் பெரிய , மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது மிக சரியான தீர்ப்பு தான்....
ஜெயகுமார் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-05 07:18:45 IST
சட்டம் ஒழுங்குன என்னவென்று தெரியாத ஒரு ராவுடி கும்பல் ஆட்சி செய்கிறது, ரௌடிசம்தான் குல தொழில், பிறகு எப்படி சட்டம் ஒழுங்குகோடு ஆட்சி செய்ய முடியும்...
குரு - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-05 07:11:01 IST
நுற்றுக்கு நுறு உண்மை. கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே அடி வாங்குவது - தேச ஒற்றுமை, லா அண்ட் ஆர்டர் தான்....
ravi - கோலாlumpur,மலேஷியா
2010-09-05 07:08:54 IST
இங்கு மலேசியா போலீஸ் எப்படி இருக்கிறது என்று வந்து பாருங்க போலீஸ் நா இது போலீஸ்....
unmaiadhaan solven - chennai,இந்தியா
2010-09-05 06:42:42 IST
இங்கு கருத்து சொல்லும் கனவான்களே, நீங்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள், பகுத்தறியும் திறன் பெற்றவர்கள், சில விஷயங்களை யோசித்து பாருங்கள்.. நீ ஏன் திருடினாய் என்று ஒருவனை கேட்டால், அவனும் திருடினான் என்பது பதில் அல்ல. அதைப்போல்தான் உள்ளது சிலரின் கருத்துகளும் கருணாநிதியின் கருத்துக்களும் ( அவர் எப்பவுமே அப்டித்தான் பாஸ்)...
சுரேஷ் கே வி - தமிழ்நாடு,இந்தியா
2010-09-05 06:32:03 IST
It is true that previous regimes of Ms.Jayalalithaa had also its fair share of controversies. People were attacked and it cannot be said law and order was excellent. But, one thing now perceptible is that the present DMK regime is allowing its own persons to monopolise everything by way of money power. It is common knowledge that police who are the custodians of law and order for general public are very much afraid of even a low rung DMK partymen and fearing to take action against DMK men for any wrong doing. For some reason or the other, well known newspapers both in English and Tamil are not giving sufficient coverage and highlighting the dangers of such monopolistic attitude of the present DMK regime be it in the field of TV, Radio, Print Media, Film Industry, Business, etc. Being at the corridors of power and in a position of decision making, having a monopoly on every vital aspect of the democracy is definitely not a good thing for the people of this great State wihch had seen some great persons like Shri Kamaraj, selfless freedom fighters like Shri VOC Pillai, Shri Subramania Bharathi, and many more such eminent persons . Slowly and steadily Tamil Nadu is falling into the hands of a single family, which is not a good thing for the State. It is the responsibility of the media to highlight and educate the masses about the value of democracy and form opinion against misdeeds of any regime be it DMK or AIADMK or for that matter any other politiical party. No one is supreme in this country and everyone is equal. Each and every person has a right to live with dignity and peacefully....
செல்வி சுமதி தேவி - மன்னார்குடி,இந்தியா
2010-09-05 05:50:42 IST
சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதானா? உன் முதுகை முதலில் பார்! அதிமுக செய்த அராஜகம் கொஞ்சமா நஞ்சமா? இப்போ புனிதர் வேடம் போடுவது எதற்காக? எல்லாம் பதவி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. மக்களே எச்சரிக்கை! ஜெயா கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தீமை. திமுக ஆட்சி தொடர்வதுதான் நல்லது....
ப.ச moneyon - witchita,யூ.எஸ்.ஏ
2010-09-05 05:02:12 IST
dear sir, made in her History will not forget the her two terms early ( made in I&I Iterms. attacks to tnseshan, advocate vijayan amrutanjan co chief and above all atacking secretariat staffs in their houses while strike tgrowin acid onwoman ias officer (janata oarty ). cm post thirst make her to talk like this.It is high time to brush aside her reports to dust. both kazhagams are only in idealogies of attackings.moneyon...
G. Sridhar - California,யூ.எஸ்.ஏ
2010-09-05 04:43:23 IST
ம‌ய‌க்க‌ம்த‌ரும் ம‌துவின் சுக‌ம்கொண்டு மனித‌குல‌ மாண்பினை கெடுப்ப‌வ‌ள். மாயப்பெண்ம‌ணி மோக‌ம்கொண்டு ம‌ன்னார்குடி குல‌த்தினை வ‌ள‌ர்ப்ப‌வ‌ள். ம‌னசுமுழுதும் கெடுத‌ல் கொண்ட‌ ம‌காம‌க‌ ப‌டுகொலையின் மகாராணியான‌வ‌ள். மாய்மால‌ம் பேச்சினில் கொண்டு ம‌னித‌னை ம‌ண்புழுவாய் நினைப்ப‌வ‌ள். ஆளாக்கிய‌ ஆசானை காட்டிகொடுத்த‌ ஆல‌கால‌விஷ‌ம் போன்ற‌வ‌ள். ஆணவ‌த்தை அக‌த்தினில் கொண்ட‌ அடிமைகூட்ட‌ த‌லைவியிவ‌ள். அனைத்தும் தானேயென்று ஆட்ட‌ம்போட்ட‌ அர‌க்க‌குல‌ அர‌சியிவ‌ள். அக‌ம்பாவ‌ம் த‌ன்னில்கொண்டு அட‌க்கி ஆண்ட‌ அட‌ங்காபிடாரியிவ‌ள். ஏழைக‌ள் நில‌த்தை கொள்ளைய‌டித்து ஏழ‌டுக்கு மாளிகை க‌ட்டிய‌வ‌ள். எல்லோரையும் வ‌ஞ்சித்து ஏக‌போக‌ வாழ்க்கை வாழ்ந்து வ‌ருப‌வ‌ள். ஏள‌ன‌ம் பேச்சினில் கொண்டு எடுத்தெறியும் த‌ன்மை கொண்ட‌வ‌ள். ஏனென்று கேட்டுவிட்டால் சேற்றை வாரி தூற்றும் த‌றுத‌லை(வி)யிவ‌ள். ப‌த‌விவெறி மோக‌ம் கொண்ட‌ ப‌க‌ல்வேஷ‌ க‌ப‌ட‌தாரியிவ‌ள், பாசாங்கு ந‌டிப்புகொண்ட‌ பாவ‌த்தின் மொத்த உருவ‌ம‌வ‌ள். ப‌சுந்தோல் போர்த்திய‌ புலியாய் போலிவேஷ‌ம் கொண்ட‌வ‌ள், பொழுதெல்லாம் ஓய்வெடுக்கும் பவிசுவாழ்க்கை காரியிவ‌ள். கொள்ளைய‌டித்த‌ ப‌ண‌த்தைக்கொண்டு கொட‌னாடு வாங்கிய‌வ‌ள் கோர்ட் கோர்ட்டாய் கூண்டில் நின்று கூசாம‌ல் பொய்யுறைத்த‌வ‌ள். குடும்ப‌த்தின‌ரை பிரித்தெடுத்து குரூர‌மாய் ர‌சிப்ப‌வ‌ள் குல‌ம்த‌னை கெடுக்க‌வ‌ந்த‌ கோடாரி காம்புயிவ‌ள்....
ராஜன் - சேலம்,இந்தியா
2010-09-05 04:41:53 IST
மனதளவில் நீ ஒரு கொசு. வார்த்தைகளில் நீ ஒரு வஞ்சகி. பேச்சினில் நீ ஒரு பசப்புகாரி. பார்வையிலோ நீ ஒரு பகல்வேஷக்காரி. திமிரினில் நீ ஒரு தீமை. தீமைகளின் பெருந்தலைவி நீ. நம்பவைத்து கெடுக்கும் நாசக்காரி....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-05 04:26:50 IST
இன்று எனக்கு வந்த விஷயத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்க அம்மா ஜெ அதிமுக வழக்கறிஞர் சங்கத்திடம் தொகுதிக்கு தலா அறுபது டம்மி வேட்பாளர்களை தேர்வு செய்து ஒரு மாதத்தில் கட்சி தலைமையிடம் பட்டியலை ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கார். தேர்வு செய்யும் வேட்பாளர்கள் யாரும் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்காத வண்ணம் அனைத்து தகுதியுடன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறபித்துள்ளார். இதை தெரிந்த மஞ்ச துண்டு தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேட்பாளர்களை நிராகரித்துவிடலாம் என்பதால் தேர்வு செய்யும் டம்மி வேட்பாளர்கள் அனைவரும் அனைத்து தகுதியுடன் இருக்கவேண்டும் என்று தகுதி நிர்ணயம் செய்துள்ளார்கள்... எது எப்படியோ மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் இருக்கும் தைரியத்தில் மஞ்ச துண்டு ஆட்சி மாறாது, உத்தரவாதம் தருகிறேன் என்று கூறுகிறது, ஆனால் இந்த முறை நூறு சதவிகிதம் காகித வாக்களிப்பு முறை தான் கொண்டு வரபோகிறார் எங்க அம்மா. எங்க அம்மாவுக்கு ஒரு சல்யூட். இந்த முறை மஞ்ச துண்டு தவறு செய்ய வாய்ப்பே இல்லை, தப்பிக்கவும் வாய்பே இல்லை, ஆட்சி அமைக்க ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக தான் வாய்ப்பு உள்ளது....
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-09-05 04:00:15 IST
எந்த அரசனாலும் சட்டம் தன் கடமையை செய்ய விடவேண்டும்,பணக்காரர்கள் ஏழைகள் என்ற பிரிவினை இருக்க கூடாது.போலீஸ் தங்களது கடமையை செய்ய விட வேண்டும். மிக முக்கியமாக நாட்டை ஆளுகின்றவர்கள் திமிர்,பழிக்கு பழி,பொறமை இவை எல்லாம் இருக்ககூடாது.நீங்கள் அம்மா ஆட்சியில் இருந்தபொழுது ஒரு அரசியல் முதியவரை நள்ளிரவில் கைது செய்து ஜெயிலில் உட்காரவைத்து ரசிதிர்களே அதை என்ன சொல்லுவது.அறிக்கை விடுமுன் நீங்கள் ஆட்சியில் இருந்தபொழுது செய்த ஹிட்லர் செயலை நினைத்து பாருங்கள்....
rajasji - munich,ஜெர்மனி
2010-09-05 03:55:22 IST
எதிர் கட்சித் தலைவி பெண் என்பதால் பொய் கேசு போட்டு அழிக்க முயற்சி பண்ணுறான் ! ஓட்டுக்கு காசு கொடுத்து ஜனநாயகத்த குழி தோண்டிப் புதைக்குறான் ! வளரும் தொழில் அதிபர்களை தன குடும்பத்துக்கு போட்டியா இருக்குறதால அடிச்சு ஒதைச்சு மிரட்டுறான் ! மக்களோட வரிப் பணத்த கணக்கு வழக்கு இல்லாம சுரண்டுறான் ! சுரண்டி கொள்ளையடிச்ச பணத்த முட்டாப் பய மக்க கிட்ட கொடுத்து புகழ் பாடி கோசம் போட்டு கொடி புடிக்க வச்சுப் புடுறான் !!! இதுக்கு ஒரு முடிவில்லையா என்றால் இருக்கு ! நீ போயி கம்யுனிச சித்தாந்தத்த படி ! அப்படி படிக்கும் போது மாவோயிசம் அப்படின்னு ஒரு வெளிச்சம் உனக்கு தெரியும் ! அப்புறம் உனக்கு நல்லா வழி தெரியும் ! தேசம் திருடு போறத தடுக்கலாம் ! மக்கள் வாழ்வு சீரழிவதை தவிர்க்கலாம் ! சமூகத்திற்கு ஒப்பற்ற சேவையை செய்து சிறப்படையலாம் !!! @ rajasji...
rajasji - munich,ஜெர்மனி
2010-09-05 03:42:29 IST
டாடா வையும் பிர்லா வையுமே மெரட்டுனவுங்க !....நட்சத்திர ஹோட்டல் ஒரு துக்கடா ! உயிர்களைப் போட்டு உயிரோட கொளுத்துனவுங்க ! அந்தக் கேசே பிசு பிசுத்துப் போச்சு ! ...இது என்ன அடி தடி கேசு ! ஒரு துக்கடா !!!இது அவங்களோட குலத் தொழில் ! மக்கள் ஓட்டுப் போடுறாங்க அப்படின்னு சொல்ல முடியாது ! இப்போ இவங்க ஒரு மைனாரிட்டி.. காங்கிரஸ் இருக்குற மாதிரி இருந்தா இவனுவள கொஞ்சம் அடக்கி வைக்கலாம் ! இந்த சின்னப் பய எதுவும் பொறுப்புக்கு வந்து நிலைமை மாறுதான்னு பார்ப்போம் !!! immm....மக்களுக்கிட்ட சொல்லுங்க அவங்க தண்டிச்சாலும் சரி ...இல்லை வாங்கி கட்டிக் கொண்டாலும் சரி ( ..I mean உதைய ) ! @ rajasji...
Mohammed Ali - Trichy,இந்தியா
2010-09-05 03:37:34 IST
இச்செயல் கண்டனத்திற்க்குரியது. அனால் இதை சொல்வதற்கு உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது. சமீபத்தில்தான் உங்கள் கட்சியினர் 3 பேரை தர்மபுரி பஸ் சம்பவத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்? தமிழக மக்கள் என்ன முட்டாள்களா? ஆம், என்றால் இங்கு இவருக்கு ஆதரவாக கருத்து சொல்லுங்கள்.........
Raj - London,யுனைடெட் கிங்டம்
2010-09-05 01:55:02 IST
I totally agree... law and order situation in tamilnadu has become worse than Bihar and other states... This should change... Request all the people favour a change in TamilNadu follow the facebook page 'Amma for TamilNadu' and wesbite electadmk dot com...
Kadayanallur Shahul Hameed - LONDON,யுனைடெட் கிங்டம்
2010-09-05 01:41:31 IST
First of all, you are a spineless, cowardish woman ! What on Earth prevent you to say the name of that gruesome VIP ? In your regime in the past, there were occurances of such ruthless attacks by your cadres....simply you forgotten. Haven't you? If you are current CM and that 'Monster' is happened to be AIADMK bigwig, what would you do madame JJ ?...
அ.பால் ராஜ் - ரியாத்சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-05 01:17:17 IST
புரட்சி தலைவி டாக்டர் ஜே.ஜெயலலிதா அவர்கள் சொன்னது மாதிரியே தமிழக வாக்காளர்கள் கருணாநிதியின் ஆட்சிக்கு ஏற்கனவே முற்றுபுள்ளி வைத்து விட்டார்கள்.வருகின்ற தேர்தலில் புரட்சி தலைவி முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.தி.மு.க.வுக்கு கேடு காலம் ஏற்கனவே தொடங்கி விட்டது....
krishna - Thanjavur,இந்தியா
2010-09-05 00:51:00 IST
என்ன ஒரு அக்கறை இந்த கன்னி தாய்க்கு. வக்கீல் சண்முகசுந்தரம் கொடுரம தாக்கப்பட்டது யாரால? செரின பொண்ணு மேல கஞ்சா கேஸ் போட்டது எதுக்காக? மாவீரன் சுப்ரமணிய சாமீ உன் பொம்பள அடியாள்கிட்ட இருந்து தல தெறிக்க ஓடினது மறந்து போச்சா? டி என் சேசன் ஏர்போர்ட் விட்டு வெளிய வராம செஞ்சது என்னத்துக்கு? கருணாநிதி கைது செய்தப்ப போலீஸ் ரவுடியாட்டம் ஆட்டம் போட்டது யாருக்காக? உன் ஆளு பாலகங்கா பெரிய ரவுடி. சசிகலா குரூப் மன்னார்குடியில் செய்யுற அட்டகாசம் சொல்லி எழுத இந்த பக்கம் போதாது மதுசூதனன் சென்னைல ஆடின ஆட்டம் மறந்து போச்சா? தராசு பத்திரிக்கைய இருந்தும் இல்லாம செஞ்சவள் நீ. உன் ஆட்சில பாலும் தேனும் ஓடிச்சா? இல்ல எங்க ஊருல முப்போகம் சாகுபடி நடந்துதா? நீ இப்ப கவுந்து படுத்து இருக்குற கொடநாடு பங்களா அப்பாவி மக்கள்ட இருந்து புடுங்குன எடம். பதவி இல்லாதப்பவே இந்த எடத்த அளக்க முடியாம உன் ரவுடி கும்பல் தடுக்கலையா, எவனோ எழுதி குடுத்தத மல்லாக்க படுத்துக்குட்டு துப்புறியே ? பேசாம ஊருகாய நக்கிகிட்டு ஓரமா குந்தி வேடிக்க பாரு. இப்பதான் தமிழ்நாடு கொஞ்சம் உருப்புடுது.......
ராஜேஷ்குமார் - திருச்சி,இந்தியா
2010-09-05 00:45:21 IST
அதுக்கு பதிலா உங்களைப்போல ஒரு ரவுடியயே ராஜ்ஜியம் ஆள விட்டுட்டா இன்னும் நல்லா இருக்குமேன்னு சொல்லறீங்களா பாட்டியம்மா?...
Munish - bangalore,இந்தியா
2010-09-05 00:42:14 IST
என்னடா இது ?... முக்கிய பிரமுகர்... பேண்ட பிரமுகருண்ணு... சன் டிவி CEO தானே அவன்... உண்மைய சொல்ல ஏன் பயபடணும் ??........
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-05 00:38:33 IST
ஏன் அய்யா தினமலர் இது என்ன சினிமா படமா? நீங்க என்ன சென்சார் போர்டு அதிகாரியா. ஆளும் திமுக ரௌடிகளுக்கு பயந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டவர்களின் பெயரை வெளியிடவில்லை. அது சன் டிவி அதிகாரி ஹன்ஸ்ராஜ் செக்சனா என்றும், திமுக ரௌடிகள் என்றும் சொன்னால் உங்க குடியா மூழ்கிடும். வாழ்க்கையில் பயம் இருக்க வேண்டியதுதான். ஆனால் பயமே வாழ்கை ஆகிட கூடாது. சம்பவம் அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரில் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் தினமலர் கூட வாய்மூடி மவுனியாக இருந்தது நாட்டை நேசிக்கும் மக்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கும் என்பது திண்ணம். நடுநிலை பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ற ஐயம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஜெயா திருச்சி கூட்டத்தில் தொண்டர்களிடம் கேட்டார். இந்த தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது என்று. அது இன்று 100 % உண்மையாகிவிட்டது. இன்று தமிழ்நாட்டில் நடுநிலை என்று கூறிகொள்ளும் சில மீடிஆக்கள், பத்திரிகைகள், டிவி சேனல்கள் இன்னும் உயிரோடு உள்ளது என்றால் அதற்கு முழு காரணம் ஜெயா மட்டுமே. இல்லை என்றால் என்றைக்கோ திமுக ரௌடிகள் அடித்து துவம்சம் பண்ணி இருப்பார்கள். ஜெயாவும்தான் இருமுறை ஆட்சியில் இருந்தார். ஆனால் இவர்கள் போல 14 டிவி சேனல்கள், 4 பட கம்பனிகள், அனைத்து தொழில்கள் என்று அனைத்து துறைகளையும் கையகபடுத்த நினைத்தது இல்லை. பாவம் தமிழ் நாடு மக்கள். இந்த நரகாசுர ஆட்சியில் இருந்து என்று விடுபடபோகிரார்களோ....
பொன்னி - தோஹா,கத்தார்
2010-09-05 00:21:19 IST
உண்மை உண்மை உண்மை...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-05 00:20:37 IST
தி மு க என்ற பெயரை மாற்றி உருட்டு கட்டை கழகம் என்று வைப்பது பொருத்தமாக இருக்கும். கருணாநிதியிடமிருந்து (மிச்சமிருக்கும்) தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.பிரியாணி வாக்காளர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.சிந்திப்பார்களா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக