சனி, 11 செப்டம்பர், 2010

இரட்டை கோபுரம் தகர்ப்பு நினைவு தினம்: ஒபாமா பங்கேற்பு

அமெரிக்காவின் நியூயார்க்கில் இரட்டை கோபுர வர்த்தக மைய கட்டிடங்கள் கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி விமானங்களால் மோதி தகர்க்கப்பட்டது. இதில், 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை பின்லேடன் தலைமையில் இயங்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர். இச்சம்பவம் நடந்து இன்றுடன் 9 ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதை தொடர்ந்து வாஷிங்டனில் 9வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது  பேசிய அவர்,
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தின் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு ஒருவர் இந்து கோவில் கட்டும் போது, ஏன் மசூதி கட்ட கூடாது. அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இது அவர்களின் விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகும்.

அமெரிக்காவை பொறுத்த வரை ஆணும், பெண்ணும், சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்று தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அது போன்றுதான் மத உரிமையுமாகும்.

அங்கு கிறிஸ்துவ தேவாலயமும் கட்டலாம். யூதர்களின் வழிபாட்டு தலமும், இந்து கோவிலும் கட்டலாம். அது போன்று அங்கு மசூதியும் கட்ட முடியும். இரட்டை கோபுர இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் வருத்தங்கள், வேதனைகளை நான் அறிவேன். அமெரிக்கர்களாகிய நாம் அவர்களின் பிராத்தனையிலும், நினைவு நாளிலும் பங்கேற்போம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக