சனி, 11 செப்டம்பர், 2010

மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம்

ஏழ்மையான இந்தியா என்று பொதுவாக கூறப்பட்டு வரும் நேரத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் மட்டும் கோடிக்கணக்கில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் சொத்துமதிப்பு 4.30 கோடி, அடுத்தபடியாக பிரணாப்முகர்ஜிக்கு 1 கோடி ரூபாய், அவரது மனைவிபெயரில் 1.5 கோடி ரூபாய், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணாவுக்கு 1 கோடி ரூபாய், விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் 3.9 கோடி ரூபாய், அவரது மனைவி பிரதீபாவுக்கு 2.16 கோடி ரூபாய், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில் 14 கோடிரூபாய், அவரது மனைவிக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. தமிழக மத்திய அமைச்சர்களில் சிதம்பரத்திற்கு 5 கோடி ரூபாயும் அரவது மனைவி நளினி பெயரில் 7 கோடி சேர்த்து சுமார் 15 கோடிக்கு சொத்து உள்ளது. ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு 9 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவரது மனைவி மற்றும் மகன்பெயரில் 6 கோடி ரூபாய் உள்ளது. அதேசமயம் மத்திய அமைச்சர்களில் குறைவான சொத்துக்கள் <கொண்டவர்களாக மம்தா பானர்ஜி 6 லட்சம் ரூபாயும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணிக்கு 1 லட்சம் ரூபாயும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு 88 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக