இந்தியாவுக்குப் பயணம் செல்லும் தமது நாட்டவர்கள் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருந்து, தமது உயிர், உடைமைகளைகாத்துக் கொள்ளவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
டெல்லி ஜும்மா மசூதி அருகே ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தையடுத்து, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு, பாதுகாப்பு தொடர்பான அறிவுரையை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

சுற்றிப்பார்க்கும் இடங்களில் பாதுகாப்பு எப்படி உள்ளது, உள்ளூர் பத்திரிகைச் செய்திகள் என்ன கூறுகின்றன என்ற விவரங்களை படித்து சூழ்நிலைக்கு தகுந்தபடி கவனத்தை கையாளும்படி அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அச்சுறுத்துவது இதன் நோக்கமல்ல. பாதுகாப்பு கருதி பொதுவான முறையில் இந்த அறிவுரை வழங்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக