சனி, 11 செப்டம்பர், 2010

இன்று விநாயகர் சதுர்த்தி

மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் தனிப்பெருந் தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர்களைப் போக்கும் அருட்கடல். அடியாருக்கு ஓடி வந்து அருள்புரியும் மூலாதார மூர்த்தி. வாழ்வில் உண்டாகும் இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறா
கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை,கொழுக்கட்டை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். விநாயகப்பெருமானுக்குரிய இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகாக குறிப்பிடுகிறார். விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. இந்த அருகம்புல்லை அர்ச்சிப்பது விநாயக வழிபாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முமு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த சதுர்த்தி நன்னாளிலே அவருடைய பாத கமலங்களை வணங்கி அருள் பெறுவோம்.
senthil - singapore,இந்தியா
2010-09-11 06:36:34 IST
விநாயகனே வினை தீர்பவனே .. யானை முகத்தோனே ஞான முதல்வனே ....... என்றும் இந்திய மக்கள் அனைவரையும் , எத்திசையில் இருந்தாலும் போற்றி காத்தருள்வாய் .... என் இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ....நன்றி தினமலர் ......
saravanan - Singapore,இந்தியா
2010-09-11 05:36:34 IST
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு ஹிந்தி இங்கிலீஷ் பிரென்ச் மூன்றும் தா . பெரிய குடும்பமே சங்கத் தமிழ் படிக்கிறது இல்லை. இதில் நான் படிச்சு நாசமா போகனுமா. பொழைக்கிற வழியை காட்டு பிள்ளையாரப்பா....
ramasubbu - jubail,சவுதி அரேபியா
2010-09-11 04:28:09 IST
MAkkal anaivarukkum enathu idhyam kanindha vinayagar chathurthi dhina nal vaazthukkal...
rajasji - chennai,இந்தியா
2010-09-11 04:13:02 IST
ஸ்ரீ விநாயகர் அம்மையவும் அப்பனையும் சுற்றி வந்து உலகத்தையே சுற்றிவந்துவிட்டதாக கூறி வெற்றி பெற்றார் ! அந்த முழு முதற் கடவுளை இந் நன்னாளில் ஸ்ரீ பிள்ளையார் அப்பனே போற்றி ! ஸ்ரீ கணபதியே போற்றி ! ஸ்ரீ கணேசா போற்றி ! ஸ்ரீ விநாயக போற்றி ! போற்றி !! என்று துதிக்கிறேன் ! இப்படி நான் போற்றி துதிக்கும் போது அது உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களையும் வாழ்த்துவதாக அமைகிறது ! இந்து மதம் ஒரு சுதந்தரமான மதம் ! அதன் தெய்வங்களுடைய சிறப்பினை மகிமையினை மனிதர்களால் உணர்ந்து கொள்ளமுடியாது ! முழு முதற் கடவுளின் அருள் இருந்தால் தான் ஒரு சில தெய்வங்களாலும் சூட்சுமத்தை அறியமுடியும் ! அப்படிப் பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சிறப்புக்கும் உரிய ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவடியினை பணிந்து வணங்கி இவ்வுலகில் அமைதி சூழவும் எல்லா ஜீவன்களும் வேற்றுமைகளை மறந்து எப்பொழுதும் அன்பில் ஆனந்தத்தில் திளைத்திருக்கவும் அருள் பாலிக்க வேண்டி பிராத்திக்கிறேன் !!! @ rajasji...
சின்னா - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-09-11 03:08:33 IST
என் உயிர் கணேசா நீயின்றி நானில்லை உன் பேர் சொல்ல வாழுவேன் நான் எல்லாம் நன்மையாகவே நடக்கட்டும் எல்லாரும் நல்லவருகலாவே இருக்கட்டும் துன்பம் துயரம் அனைத்தும் துடயட்டும் இன்பம் சந்தோசம் நிறைந்து பரவட்டும் மக்கள் நலனே மகேசன் நலன் எங்கள் நலனே உங்கள் நலன் கணேசா வாழ்க விநாயகா வாழ்க எங்கள் நாயகனே வாழ்க உலக வீரனே வாழ்க வில்லாதி வீரனே வாழ்க வீர புதல்வனே வாழ்க உயிருள்ள இறைவா வாழ்க கருணை கடவுளே வாழ்க என்னுடன் இரு என் இறைவா உன் கருணை என்றும் இருக்கட்டும் என் உயிரே விநாயகா...
பாஷா.J - DUBAI,இந்தியா
2010-09-11 01:29:21 IST
உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக