புதன், 8 செப்டம்பர், 2010

கச்சத் தீவு , கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது

இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, 'இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

அத்துடன் இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றும் கிருஷ்ணா மேலும் கூறியுள்ளார். இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக நினைக்கிறது என்பதும் தமிழர்களுக்கோ அல்லது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரியாதது அல்ல.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் (இதன் மூலம்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது) முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம் என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே அதுதான் வேடிக்கையாகவுள்ளது!

இரகசியமாக செய்யப்பட்ட ஒப்பந்தம்!

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (னiளிரவநன ளைடயனெ) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.

கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது, அப்போது பேசிய தமிழக உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.மூக்கையாத் தேவர், விஸ்வநாதன் ஆகியோர் கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிப் பேசினர். ஆனால், அதற்கு உரிய பதில் தராமல் இந்திரா காந்தி அரசு தட்டிக் கழித்தது.

ஏனென்றால் கச்சத் தீவு நமது நாட்டின் ஒரு பகுதி என்றால், அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் வேறொரு நாட்டிற்குத் தாரை வார்த்திட முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்க்கவே - அதாவது இரகசியமாக வைத்து ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிடவதற்காகவே - கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்டத் தீவு என்று மத்திய அரசு நிலையெடுத்தது. (இத்றகான ஒத்திகை 1956ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்திருப்பது பின்னர் தெரிந்து வரலாறு).

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இரகசியமாக பேசி, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை 'முறையாக செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்' என்கிறார் அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா!

அதுமட்டுமல்ல, எல்லைக் கோடு வரைவில் கூட ஒரு மோசடி செய்துதான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்கரைகளில் இருந்து சம தூரத்தில் புள்ளிகளை வைத்து, அந்தப் புள்ளிகை இணைத்து கோடு போட்டு எல்லை நிர்ணயம் செய்து கொள்வது என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு கச்சத் தீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு ஏற்றார்போல் கோட்டை இழுத்து போட்டார்கள் என்று இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா கூறியுள்ளார்! இப்படியெல்லாம் மோசடி செய்து கொடுக்கப்பட்டதுதான் கச்சத் தீவு.

கச்சத் தீவு அரபிக் கடல் பகுதியில் இருந்து, அங்கு கர்நாடக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்திருந்தால், இப்படி பேசுவாரா கிருஷ்ணா? தமிழன் உரிமை இருந்தால் என்ன, போனால் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக