புதன், 29 செப்டம்பர், 2010

ஸ்வைன் புளூவை தடுக்கும் சித்த மருந்துகள்

ஸ்வைன் புளூவை  தடுக்கும் சித்த மருந்துகளான துளசிவேம்பு, நில வேம்பு, தக்கோலம் ஆகிய மூல பொருட்களை கொண்ட கப சுரக் குடிநீர்,

ஜூரத்துக்கு மருந்தான பிரம்மானந்த பைரவம் மாத்திரை, உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும் அமுக்கரா சூரணம் ஆகியவற்றை சாப்பாட்டால் பன்றிக் காய்ச்சலை வராமல் தடுக்க முடியும் என்று ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் பிரச்சாரம் செய்து மருந்துகளை வழங்கி வருகிறார்கள்.
மேலும் விவரம் அறிய 42267777 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறி உள்ளனர்.

இந்த 3 சித்த மருந்துகளையும் மிக குறைந்த விலையில் வழங்க கல்லூரி நிறுவனர் லியோ முத்து ஏற்பாடு செய்துள்ளார்.

ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம் மடிப்பாக்கம் ஸ்ரீசாய் ராம் மெட்ரிக்பள்ளி, தி.நகர் லியோ ஹவுசிங் ஆபீசிலும் இந்த மருந்துகளை பெறலாம்.

சின்ன வெங்காயம், நெல்லிக்காய், மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பன்றிக்காய்ச்சல் நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் கூறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக