டெல்லி: வரும் 30ம் தேதி அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படுவதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய உளவுத்துறையான ஐ.பி., கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களை பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் கண்டு மத்திய அரசை எச்சரித்துள்ளது.
இந்த மாநிலங்களிலும் மேலும் சில மாநிலங்களிலும் மொத்தம் 19 இடங்கள் மிக மிக பதற்றமானவை என்றும், இங்கு மோதல் வெடிக்க வாய்ப்புள்ள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த இடங்களுக்கு மத்தியப் படைகள் விரைந்துள்ளன. இவை வன்முறை நிகழக்கூடும் என கருதப்படும் இடங்களை 10 நிமிடங்களில் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத் போல உத்தரப் பிரதேசத்திலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநிலத்துக்கு 10,000 மத்தியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக