வியாழன், 16 செப்டம்பர், 2010

தேசம் நெற்றில் பேட்டியா… கோவணத்தை கூட உருவிப்பார்ப்பார்கள் கவனம்

தேசம் நெற் என்றொரு இணையம் இருக்கிறது. மன வக்கிரம் கொண்டவர்களால் நடாத்தப்படும் இணையம். யாராவது ஒருவர் கட்டுரை எழுதிவிட்டால் கொமண்ட்ஸ் என்கிற பெயரில் நாலைந்து அலுக்கொசுகள் சேர்ந்து கட்டுரை எழுதியவனை பற்றி தாறுமாறாக எழுதி இந்த ஏரியாப்பக்கம் வருவியா தேசத்திற்கு கட்டுரை எழுதுவியா என ஒரு வழி பண்ணி விடுவார்கள். இதனால் தேசத்தில் கட்டுரைகள் எழுதிய பலர் துண்டைக்காணம் துணியைக்காணம் என ஒடிவிட்டாங்கள். கட்டுரைகள் எழுத ஆட்கள் இல்லை இனி என்ன செய்யலாம் என சொறிஞ்சு கொண்டிருந்த தேசத்திடம் பாரிஸ் குகநாதன் டன் ஒளி இயக்குனர் முறையாக மாட்டிக் கொண்டார்.  சென்னையில் குகநாதனை பணத்துக்காக கடத்தப்பட்ட விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த விடயமாகும்.  (இது பற்றி பின்னர் பார்ப்போம்.) குகநாதனும் பணத்தை செலுத்தி விட்டு இலங்கைக்கு போய்ச்சேர்ந்து விட்டார். இந்த விடயம் தொடர்பாக இனியொருவும் தமிழ்சேர்க்கிளும் அடிச்சுக்கொண்டன. இந்த இரண்டு இணையத்தளங்களும் அடிச்சுக்கொண்டிருப்பதைப் பார்த்த தேசம் நெற்றுக்கு தின்ன அவல் கிடைச்ச மாதிரி சும்மா இருந்த குகநாதனை பேட்டியடுத்தது.
குகநாதனுக்கு விஷயம் விளங்கவில்லை. தேசம் நெற்றுக்கு பேட்டி கொடுத்தால் கொமண்ட்ஸ் என்கிற பெயரில் பல்லி ப+ரான் எறும்பு என வந்து நோண்டி பிறாண்டி ஒரு வழி பண்ணும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. குகநாதன் கடத்தப்பட்டபோது அனுபவித்த கொடுமைகளை விட கொமண்ட்ஸ் என்கிற பெயரில் தேசம் நெற்றில் குகநாதன் சீரிழிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு விடப்பட்டுள்ளார்.
தேசம் நெற்று ஆசிரியர் குழவிற்கு இப்போது மன நிம்மதி.  மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பிறரை எவ்வாறு துன்புறுத்தி இன்பம் காண்பார்கள் என்பதற்கு தேசம் நெற்றில் கொமண்ட்ஸ் எழுதுபவர்கள் சிறந்த உதாரணம். விமர்சனங்கள் ஆரொக்கியமானவையாக அமையவேண்டும். அது ஊடகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாகும். ஆனால் தேசம் நெற் கொமண்ட்ஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய மனவக்கிரங்களை கொட்டித் தீர்ப்பார்கள். கட்டுரையாளனுக்கு ஆரொக்கியமான விமர்சனம் தேவை. ஆனால் கட்டுரையாளனின் கோவணத்தை அவிழ்த்து விட்டு அவனை வீதியில் நிர்வாணமாக்கி தனது வக்கிரத்தை கொமண்ட்ஸ்கள் மூலம் தேசம் நெற் தீர்த்துக் கொள்கிறது.
இவர்களெல்லாம் ஊடகவியலாளர்கள்……?.  குகநாதன் மட்டுமல்ல எத்தனையோ பேர் தேசம் நெற்றில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளனர். யார் இவர்கள்?. புனைப்பெயர்களில் மூகமூடி போட்டுக்கொண்டு வந்து தாக்கும் வீரவான்கள்?.  இந்த வக்கிரங்களை கருத்துச்சுதந்திரம் என்கிற பெயரில் அனுமதிக்கும் மனநோயாளிகளான ஆசிரியர் குழு.
குகநாதன் போன்றவர்கள் தேசம் நெற்றிற்கு பேட்டி கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் மீதான அவதூறுகளுக்கு தேசம் ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பு நிற்காது. அது ஓரத்தில் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டு நிற்கும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொமண்ட்ஸ் என்கிற பெயரில் சின்னாபின்னமாக்கப்படுவது அவர்களுக்கு எந்தவிதத்திலும் கவலைக்குரிய விடயமில்லை. மன வக்கிரம் கொண்டவர்கள் மற்றவர்களை துன்பப்படுத்தி இன்பம்  காண்பார்கள். தேசத்தில் கட்டுரை எழுதுபவர்களும் பார்த்து ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.  இல்லாவிட்டால் உங்கள் மனைவிமாரையும் கொமண்ட்ஸ் என்கிற பெயரில்……………….
உறங்கும்போது பானைகளை உருட்டுவது ப+னைகள் குணம்
ஆற்றில் இறங்குகையில் மனிதர்களை இரையாக்குவது முதலைகள் குணம்
தேசம் நெற்றில் எழுதுவோரை இழிவுபடுத்துவது தேசம் நெற்றின் குணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக