ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி யாழ். சிறார்கள் நடத்திய சமாதான பேரணி!

“பெற்றோர்களே ஆசிரியர்களே எமக்கு பாதுகாப்பையும் ஆதரவையும் அன்பையும் அரவனைப்பையும் தாருங்கள்’ என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் நேற்று சனிக்கிழமை ஏழாலை தெற்க்கு ஸ்ரீமுருகன் சிறுவர் கழகச் சிறார்கள் சர்வதேச தினத்தையொட்டி சமாதானப் பேரணியை ஏழாலைப் பகுதியில் நடத்தினார்கள்.(பட இணைப்பு)

இந்த சமாதானப் பேரணியில் உடுவில் பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலர் நவரத்தினராசா சிறுவர் மேம்பாட்டு அலுவலர் திருமதி சந்திரா நக்கீரன் கிராம அலுவலர் ஜெயகரன் சிறுவர் நிதிய இணைப்பாளர் மகேந்திரன் சாந்தி நிறுவன இணைப்பாளர் விஜயரட்னம் உட்பட மற்றும் பெற்றோர்களும் இளைஞர்களும் சிறுவாகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
உடுவில் பிரதேச செயலக சிறுவர் பகுதியும் சாந்திகம் சிறுவர் நிதியம் இலங்கையும் மற்றும் சாந்திகம் நிறுவனமும் இணைந்து சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
பல்வேறு சுலோக அட்டைகளையும் தாங்கிய சிறுவாகளின் ஊர்வலம் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்க்கு மேற்பட்ட வீதிகள் வழியாக இடம் பெற்று மீண்டும் ஆரம்பித்த இடமான ஜரோப்பிய மண்டபத்தை வந்தடைந்தது

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக