புலிகளை வீழ்த்திய பிறகு இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை'
கொழும்பு, செப்.29: இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்திய பிறகு இதுவரை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவில்லை. பயங்கரவாத சம்பவத்தால் யாரும் பலியாகவில்லை என்று அந்நாட்டின் வன்னிப் பிராந்திய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: விடுதலைப்புலிகள் ஆதிக்கத்தால் வன்னிப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அச்சம் பீடித்திருந்தது. விடுதலைப் புலிகள் இருந்த போது வன்னிப் பகுதி மக்கள் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதியில் வசித்த மக்களும் பயத்துடனையே வாழ்ந்தனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது அமைதியான சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலால் வன்னிப் பகுதி மக்களின் மனம் அமைதி அடைந்துள்ளதுடன், நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். இலங்கையில் இதுபோன்ற சூழல் பெரிய அளவிலான தியாகத்துக்கு பிறகே நிலவுகிறது. இதைக் கட்டிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை, பொறுப்பு என்றார் கமல் குணரத்னே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக