வெள்ளி, 1 அக்டோபர், 2010

நல்லதோர் வாழ்க்கைக்கு முயற்சிக்கும் முன்னாள் பெண் போராளிகள்

நல்லதோர் வாழ்க்கைக்கு முயற்சிக்கும் முன்னாள் பெண் போராளிகள்
(ஸ்ரீலங்காவின் அநேகமான முன்னாள் பெண்போராளிகளின் வழமைக்குத் திரும்பி விட்ட வாழ்க்கைப் பாதை மிக நீண்டதாக இருக்கிறது.)
ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தின் வெகு ஆழமான உட்பகுதியாகிய பெரிய புல்லுமலை கிராமத்தைச் சேர்ந்த லலிதாவுக்கு 23 வயதாக இருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைத்தேடி வந்தனர். அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்த ஒவ்வோர் குடும்பமும்,மூன்று தசாப்தங்களாக சுதந்திர தமிழ் தாயகம் வேண்டிப் போராட்டம் நடத்தி வந்த பிரிவினைச் சக்திகளுக்கு தமது குடும்பத்திலிருந்து ஒரு பிள்ளையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. தன்னுடைய இளைய சகோதரியைத் தவிர்ப்பதற்காக வேண்டி லலிதா அதில் இணைந்து கொண்டார்.
9 வருடங்கள் போராட்டத்தில் இணைந்து பெண்புலிகளின் குழவொன்றுக்கு தலைமை ஏற்றதின் பின்பு, 2004ம் ஆண்டு சுகவீனமுற்றிருந்த தனது தாயாரைப் பராமரிக்க வேண்டி ஓட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிலிருந்து தப்பியோடினார். தான் ஸ்ரீலங்கா இராணுவத்தாலோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினாலோ அடையாளம் காணப்பட்டு தனது குடும்பத்தை அபாயத்திலாழ்த்தி விடுவோமோ என்கிற அச்சத்திலேயே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்
நான் ஒவ்வொரு நாளும் என் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததால் யாரும் என்னைத் தொடர்ந்து வர முடியவில்லை. என்று கூறினார். இன்று லலிதா மட்டக்களப்பில் சிறிய ஒரு தொகையை வருமானமாகத் தரும் தற்காலிகக் கடை ஒன்றை நடத்திக் கொண்டு பகுதி மட்டுமே கட்டப்பட்ட முற்றுப் பெறாத ஒரு வீட்டில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார்.
உலக வங்கியின் தரவின்படி மூன்றிலொரு பங்கு தொழிற்திறன் வாய்ந்த இளைஞர்களே ஸ்ரீலங்காவில் வேலையில் உள்ளார்கள்.மட்டக்களப்பு சனத்தொகையின் பெரும் பகுதியினர் தங்கியிருப்பது மரபுசார் வாழக்கைத் தொழில்களான மீன்பிடி,மற்றும் நெற்செய்கை போன்றவற்றின் தயவில்.
ஆனால் லலிதாவைப் போன்ற பெண்கள் படும் இன்னல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். மட்டக்களப்பு பழமைவாத குடியுரிமைச் சமூகத்தைச் கொண்டது அது ஆயத இயக்கத்தில் இருந்த போது செய்து பழக்கமுள்ள திறன் மிக்க தொழில்களைச் செய்ய பெண்போராளிகளை அனுமதிப்பதில்லை. இதுவே முன்னாள் பெண்போராளிகளின் முன்புள்ள மிகப் பெரிய பிரச்சனை. இவ்வாறு கூறினார்.
ஐக்கிய இராச்சிய லிவர்பூல் உஷ்ணமண்டல மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான சோனி இன்பராஜ் அவர்கள்.அவர் மட்டக்களப்பிலுள்ள முன்னாள் பெண்போராளிகளின் மீள் ஒருங்கிணைப்பை பற்றிய திறனாய்வு படிப்பொன்றை சமீபத்தில் முடித்திருந்தார்.
சமூகம் முன்னாள் பெண்போராளிகள் தையல் படிப்பதையோ,அல்லது வீட்டு வேலை உதவியாளராக இருப்பதையே விரும்புகிறது,அதைவிடுத்து தச்சுவெலை, மேசன்வேலை, கொத்தன்வேலை அல்லது கணணி திருத்தல் போன்ற வேலைகளைச் செய்ய விடுவதில்லை அவர் கூறினார்.
இதே நேரம் எப்படியாயினும் இன்பராஜ் நம்புவது பெண்கள் தங்களுக்குள் உறுதியான ஒரு ஆதரவு வலையமைப்பை உருவாக்கியுள்ளார்கள்,முக்கியமாக யுத்தத்தின் பின்னான இந்தக் காலகட்டத்தில் பொதுவாக வீட்டுத் தலைமையை வகிப்பது அவர்களே.
“முன்னாள் பெண்போராளிகள் என்கிற ஒரு கறை சமூக மட்டத்தில் இவர்களுக்கெதிராக இருப்பதாக நான் கருதவில்லை. பெரும்பான்மையானோர் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே” அவர் மேலும் கூறினார்
இடப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM)  660 முன்னாள் போராளிகளுக்கு உதவியுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இந்நிறுவனம் அவர்களை கிழக்கிலுள்ள அரசசார்பு நிறுவனங்களில் பதிவுசெய்து ஆபத்தான ஒரு வேலையை துணிவுடன் மேற்கொண்டது.
இந்த ஆட்கள் அரசின் மறுவாழ்வு மையங்களிலிருந்து வெளியேறியவர்கள். இடப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனக் குழவின் ஸ்ரீலங்கா தலைவர் ரிச்சட் டான்சிங்கர் கூறியது.” வெளியேறியவுடன் அவர்கள் எங்களிடம் வருவார்கள் நாங்கள் அவர்களின் தேவையையும் இலட்சியத்தையும் கண்டறிந்த பின்பு அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேண்டிய உதவிகளைச் செய்கிறோம் உதாரணத்துக்கு வியாபார மானியங்கள்,குடியியல் கற்கைப் பயிற்சிகள்,மற்றும் தொழிற் பயிற்சிகள் போன்றவை.
ராசேந்தி கிழக்கின் கிராமியப் பகுதியாகிய திகிலிவெட்டையைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அவரது வீட்டுக் கதவைத் தட்டியபோது அவருக்கு 13 வயது மட்டுமே. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிடியிலிருந்த பகுதியாகிய இருந்த வாகரையில் நடந்த பயங்கரமான யுத்தத்தில் ராசேந்தி தப்பிப் பிழைத்தவர்.அவரது உற்ற சிநேகிதி உட்பட 80 புலிகள் இதன்போது கொல்லப் பட்டிருந்தனர். குண்டு துகள்களினால் ராசேந்தி தாக்கப் பட்டிருந்தார். புலிகளின் வைத்தியப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் ஒரு உலோகம் எலும்புக்குப் பதிலாக அவரது தலையோட்டின் வலது பக்கத்தை மாற்றீடு செய்துள்ளது.
ராசேந்தி தன் நினைவுகளை பின் திரும்பிப்பார்க்கிறார்;. நான் வீடு திரும்பியபோது ஒரு வகை அவமதிப்புக்கு உள்ளானேன். எனது பழைய நண்பர்களில் பலரும் என்னிடம் பேசவேயில்லை. என்னுடன் கூட்டுச்சேரவே பயந்தார்கள்” ஸ்ரீலங்கா இராணுவத்தால் அடையாளம் காணப்பட்டதினால் ராசேந்தி மறைந்து வாழ்வதற்காக மட்டக்களப்பு நகருக்கு பக்கமாக ஓடி 3 வருடங்கள் வரை அங்கு மறைந்து வாழ்ந்தார். நான் மிகவும் அச்சத்திலிருந்தேன் ராசேந்தி கூறினார்.
இப்போது 22 வயதாகும் அவர் தனது பாடசாலைப் பருவத்தின் பெரும்பகுதியை திரும்ப பெறமுடியாதபடி இழந்து விட்டார். பதிலாக அவர் தேசிய சர்வோதய தொழிற்கல்விப் பயிற்சி நிலையத்தில் இணைந்து ஒரு நிலையான தொழிலை பெறும் நம்பிக்கையில் 6மாத பேக்கரி பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
சர்வோதய நிகழச்சி நிரல்கள் அரசின் பின்புலத்தின் ஒரு பகுதியாகிய மீள் ஒருங்கிணைப்பின் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளன. தொழிற்திறனுள்ள தொழிற்பயிற்சி நெறிகளான மின்சாரவியலாளர்கள், குழாய்ப் பணியாளர்கள், அழகியலாளர்கள், உணவு தயாரிப்பாளர்கள், சமூகத் தலைமைத்துவப் பயிற்சி போன்றவை வழங்கப் படுகின்றன.
இன்றுவரையில் சுமார் 200 பேர் வரை இந்தப் பயிற்சி நெறிகளில் பட்டம் பெற்று வெளிNறியுள்ளார்கள். தனியார் துறைகளில் அவர்களின் தொழிற் திறமைக்கு மிகப் பெரிய கிராக்கி இருக்கிறது மட்டக்களப்பு சர்வோதயாவில் நீண்டகாலமாக இணைப்பாளராகப் பணிபுரியும் .ஈ.எல்.ஏ.கரீம் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், 30 வருடங்களாக நீடித்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள்,வேலைவாய்ப்புகளுக்கும் தமது எதிர்காலத்துக்கும் வேண்டி எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தாயுமில்லை,தந்தையுமில்லை உடன்பிறப்பு எவருமில்லை என்ற நிலையில் அவர்கள் அதிகளவு சவால்களை எதிர்கொண்டார்கள்.அநேகமானோர் கொழும்பிலுள்ள இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு தொழிற்திறனையே கொண்டிருந்தார்கள்.ஆனால் மெல்ல மெல்ல நாங்கள் புதிய ஒரு தலைமுறையினை உருவாக்கி வருகிறோம்.
நன்றி : IRIN News    தமிழில் எஸ்.குமார் (தேனீ மோழிபெயர்ப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக