ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பியசேன போங்கடா நீங்களும் உங்கட ஒழுங்காற்றும், நீங்களே ஒழுங்கானவர்கள் இல்லை

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த கட்சியில் நமக்கு இடமேதுby teavadai

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த கட்சியில் நமக்கு இடமேது.
ஊரில் செல்வாக்குள்ளவங்களை பிடித்து கட்சியில் அவசர அவசரமாக சேர்த்து தேர்தலில் போட்டியிட்டால் என்னவாகும் என்பதற்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு எம்பி பியசேன அடித்துள்ள குத்துக்கரணம் நல்லதொரு உதாரணமாகும்.
அரசுக்கு ஆதரவாக 18வது திருத்தச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்த பியசேன எம்பி அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டார். அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என மாவையும் சுரேசும் பத்திரிகைகளில் அறிக்கை விட்டு ஒரு வெருட்டலை கொடுத்துப்பார்த்தனர். ஆனால் பியசேன போங்கடா நீங்களும் உங்கட ஒழுங்காற்று நடவடிக்கையும் எனக் கூறிவிட்டு நீங்களே ஒழுங்கானவர்கள் இல்லை பிறகு எதற்கு என்மேல் ஒழுங்காற்று நடவடிக்கை என பத்திரிகையுடாக ரி.என்ஏக்கு எச்சரிக்கையும் விட்டு அரசுடன் சேர்ந்து விட்டார்.
ரி.என் ஏ இப்போது பயத்தில் இருக்கிறது. இப்படியே ஒவ்வொருத்தராக கட்சியை விட்டுப்போனால் கடைசியில் யார்தான் மிஞ்சுவார்கள் என்கிற பயம் அவர்களை சூழ்ந்திருக்கிறது. 18வது திருத்தச்சட்டம் வந்ததற்கே இந்த நிலமை என்றால் 13வது திருத்தச்சட்டம் வந்தால் இருக்கிற எம்பிக்களில் யார் யார் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவார்களோ அவர்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது.
புயலுக்கு நாணல் சாய்வதினால்தான் அது நிலைத்து நிற்கிறது. ஆனால் ஆலமரம் மாதிரி நின்றால் சாய்ந்துவிடும். பிறகு என்ன கண்டவன் நிண்டவன் எல்லாம் விறகுக்கு கொண்டு போய்விடுவார்கள். இப்போ ஆலமரம் மாதிரி நிற்கிறதா இல்லை நாணல் மாதிரி நிற்கிறதா என ரி.என் ஏ தலைவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்ப்பு அரசியலைக்கூட சாதூரியமாக நடாத்த வேண்டும். அந்த தந்திரம் ரி.என் ஏக்கு இல்லை. மாவையும் சுரெசும் சம்பந்தரும் எல்லாவற்றிற்கும் அரசுக்கெதிராக கொடுக்கு கட்டி நின்றால் பல பியசேனாக்கள் ரி.என் ஏயிலிருந்து வெளிக்கிடுவார்கள். போட்டிக்கு தமிழ்க்கட்சிகளின் அரங்கம் வேறு வந்திருக்கிறது. அவர்களும் வவுனியா மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என கூட்டம் நடாத்தி வருகின்றனர். பத்திரிகைகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதெல்லாம் ரி என் ஏயை யோசிக்க வைத்திருக்கிறது. நட்புறவு கொண்ட யு.என்பி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. ஜனாதிபதி தேர்தலில் சரத்தை ஆதரித்தும் பிரயோசனமில்லை
இனி என்ன செய்வது. தலையைச்சொறிஞ்சு கொண்டு யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அரசியல் சாதூ;யம் வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் 13எம்பிக்கள் 5ஆக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக