ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

முருகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் ஆடம்பர ஹோட்டல்

முருகண்டி பிள்ளையாருக்கு அருகில் உள்ள ஹோட்டலை நிறுத்த வேண்டும் - ஆளுநருக்கு ஆனந்தசங்கரி கடிதம்
முருகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் ஆடம்பர ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வெகுண்டு எழுந்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்த சங்கரி. ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இவ்வாடம்பர ஹோட்டலின் திறப்பு விழாவை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண் டும் என்று கோரி வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறிக்கு ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.அரசு, ஹோட்டல் அமைத்திருக் கும் கட்டிடத்தை கட்டாயம் பாரமெடுத்து யாத்திரிகர் விடுதியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கட்டிட உரிமையாளருக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் ஆலோசனை கூறி உள்ளார். வேண்டுமாயின் ஆலயத்தில் இருந்து தொலைவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை அமைக்கின்ற மைக்கு அரசு இக்கட்டிட உரிமை யாளருக்கு அனுமதி வழங்கலாம் என்றும் ஆனால் அந்த ஹோட்டலில் மாமிசம் மதுபானம் போன்றவற்றின் வாடை கூட இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடனேயே இவ் வனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக