செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வல்லிபுர கோவில் பொருட்களை வைத்திருந்தவர் கைது

யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு சொந்தமான சிலைகளையும் செப்பினால் ஆன நாகபாம்பு உருவங்களையும் திருடினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மது போதையில் மாலுசந்தி ஆலடி வைரவர் கோவில் பாலத்தின் கீழ் துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இருந்துள்ளார். இவரது நடத்தையில் இப்பகுதி இளைஞர்கள் சந்தேகம் கொண்டனர். இவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போதே கோவில் சிலைகள் நாக பாம்பு உருவங்கள் ஆகியன இவரின் உடைமையில் இருந்தமையை கண்டு பிடித்தனர். இளைஞர்கள் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். விரைந்து வந்த பொலிஸார் இவரிடம் இருந்து இப்பொருட்களை மீட்டார்கள்.

இப்பொருட்கள் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு சொந்தமானவை என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக