சனி, 11 செப்டம்பர், 2010

யாழ் நகர வர்த்தகர்கள் சிலர் பொலிஸாரால் கைது

யாழ் நகர வர்த்தகர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்.வர்த்தக சமுகம் தனதவர்த்தக நிலையங்களிற்கு முன்னால் கழிவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்ற ு கடுமையான கண்டணத்தை வெளியிட்டுள்ளதுடன். அராஜகத்தின் உச்சக்கட்டம் எனவும் விபரித்துள்ளது. குற்றச்சாட்டின் பெயரில் கடந்த இரண்டு நாட்களாக நகரில் உள்ள வர்த்தகர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்
இவர்கள் கைது செய்யப்பட்ட விதம் யாழ். மாவட்ட வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முச்சக்கர வண்டிகளில் சிவில் உடைகளில் வந்த பொலிஸார் வர்த்தகர்களை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இது முற்றிலும் முரணான செயற்பாடாகும் என வணிகர்கள் குறிப்பிட்டுள்ளதுடன் நாம் கொலைக்குற்றவாளிகளோ திருடர்களோ அல்ல எனவும் இதைத் தொடந்தும் நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் எச்சரித்துள்ளனர்.
கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டியது மாநகர சபையின் பொறுப்பு. கழிவுகளை வர்த்தகர்கள் அகற்ற முடியாது எனக்குறிப்பிட்டுள்ள வணிகர்கள் மாவட்டத்தில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
நகரில் பெருமளவான கழிவுகள் தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பிரயாணிகளால் போடப்படுகின்றது. ஆனால் அது குறித்து பொலிஸார் கவனிப்பதே கிடையாது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக