வியாழன், 23 செப்டம்பர், 2010

காணிகளை பார்வையிட இந்திய உயர்மட்டக்குழு வன்னி விஜயம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு நேற்று வன்னி சென்றுள்ளது.
நேற்றுக் காலை கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீட்டுத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட்டுள்ள மேற்படி குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதிகளுக்குச் சென்று வீட்டுத் திட்டத்துக்கான காணிகளை பார்வையிடவுள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதம செயலாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழுவே கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் விஜயம் செய்து மேற்படி காணிகளை பார்வையிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50,000 வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், முதற் கட்டமாக 2,000 வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீடமைப்புக் கிராமம் 125 வீடுகளுடன் அமையவுள்ளதுடன், கண்டாவளை, பளை, பூநகரி பிரதேசங்களை உள்ளடக்கியதாக 325 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கான காணிகளும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதுடன் விரைவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் முதற் கட்டமாக 200 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இவ்வீட்டுத் திட்டம் அமையவுள்ளதுடன், துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு கரைதுறைப்பற்று பிரதேசங்களில் இதற்கான காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தேவநாயகம் நேற்றுத் தெரிவித்தார்.
இதற்கான காணிகளையே நேற்றும் இன்றும் கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் இந்திய உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இவ்வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மாணப் பணிகள் இரண்டொரு வாரங்களில் ஆரம்பமாக வுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக