செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சந்திரபோஸ்

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட, திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் தற்போது நலமாக உள்ளதாக அவரது மகன் வினோத் தெரிவித்துள்ளார்.
சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.>டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து நினைவிழந்து, கோமாவில் மூழ்கினார்.
சந்திரபோஸ் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
தற்போது சந்திரபோஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனால் நலமாக உள்ளார் எனவும், அவரது மகன் வினோத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக