சனி, 18 செப்டம்பர், 2010

பிபிசி இற்கு அனுமதி மறுப்பு,நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை கிளிநொச்சியில்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை கிளிநொச்சியில் பதிவு செய்ய பிபிசி இற்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரால் இன்று கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆணைக்குழுவின் செயற்பாட்டை பதிவு செய்வதற்காக உள்ளூர் ஊடகங்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிபிசி போன்ற அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கவில்லை.
பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிட்டுள்ளது.
மேலும் அச் செய்தியில் தாம் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் தினத்தில் ஊடகத்தின் சார்பாக தாம் கலந்துகொள்ளவென விண்ணப்பித்த போது பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அதனை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள சாந்தபுரம் மக்களை நல்லிணக்க ஆணைக் குழு இன்று சந்திக்கவுள்ளது.
இதனையடுத்து கரைச்சி மக்களையும் இந்தக்குழுவினர் சந்திக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலும் நல்லிணக்க ஆணைக்குழு மக்களை சந்தித்து அவர்களின் சாட்சியங்களை பதிவுசெய்துக்கொள்ளவுள்ளது
இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை, கண்டாவளை பிரதேசத்திற்கு செல்லும் நல்லிணக்க ஆணைக்குழு பூநகரியிலும் மக்களை சந்தித்து சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக