புதன், 8 செப்டம்பர், 2010

எஸ். பொ:நாவலர்,சிறுபான்மைத் தமிழரை ஒடுக்கிய அசுர ஜாதி வெறியர்.

நல்லைநகர் ஆறுமுக நாவலரை தமிழ்த் தேசியவாதத்தின் தந்தை என்று கைலாசபதி போன்றோர் தலையில் வைத்துக் கொண்டாடிய பொழுது, வேளாள ஜாதியாரின்  அரசியல் மேலாதிக்கத்திற்கு மட்டுமே உழைத்துத் தமிழர் ஒற்றுமையைச் சிதைத்தவர் என்று அவரை விமர்சித்து கண்டனங்கள் எழுதியவன் நான். சிறுபான்மைத் தமிழரை  ஒடுக்கிய அசுர ஜாதி வெறியர். ஆனாலும், தமிழ் வசன நடையின் கைவந்த வல்லாளர் என்பது அவருடைய மறுமுகம். அவர் வளர்த்த கண்டனக் கலை என் ஆதர்சம். அவர் யாழ் மண்ணில் வளர்த்த கண்டன இலக்கிய மரபினை நானும் விரும்பி முன்னெடுக்கின்றேன். எஸ். பொ.வும் நல்லூரிற் பிறந்தவனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக