ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான குறிப்பாக காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகள்

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும்
புலிகளுக்கு முன்பே கிழக்கில் ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கினர் அதனால் முஸ்லிம்கள் தமிழ் ஆயத இயக்கங்கள் மீது வெறுப்பு கொண்டனர் அந்நிலையிலே 1985  ஏப்ரல் இன வன்முறைகள் இரண்டு இனங்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலின் வெளிப்பாடாக வெடித்தது. ஆனால் புலிகளின் பரந்துபட்ட முஸ்லிம் மக்களை கிழக்கிலிருந்து இனசுத்திகரிப்பு செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட்டாலும் கிழக்கின் திகாமடுல்லை மாவட்டம் புலிகளுக்கு சவாலாக அமைந்ததால் மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கில் இலகுவாக முஸ்லிம்களை வெளியேற்றும் தங்களின் முதல் மூலோபாய புள்ளியாக புலிகளால் திட்டமிடப்பட்டது அதற்கிணங்க 1990ம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலைகளை திட்டமிட்டு கிழக்கு மாகாணமெங்கும் மட்டுமல்ல அதன் வட எல்லைப்புறத்தில் அமைந்த வட மத்திய  மாகாணத்திலுள்ள முஸ்லிம் கிராமமான அளிஞ்சிப்போத்தானையிலும் புலிகள் மேற்கொண்டனர்.
ஆயினும் இதனால் பரஸ்பரம் தமிழ் முஸ்லிம் உறவு விரிசல் கண்டாலும் . அதன் வெளிப்பாடாக பல தொடர்ச்சியான படுகொலைகள் அச்சறுத்தல்கள் ஆக்கிரமிப்புகள் என பலவகையான அழுத்தங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை கிராமம் கிராமமாக வெளியேற்றும் தங்களின் திட்டத்தில் வெற்றிபெறுவதையும் அவர்கள் கண்டுகொண்டனர். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் முஸ்லிம் பகைமை தூண்டப்பட வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்பட்டது. கிழக்கில் தீராத தமிழ் முஸ்லிம் பகைமை ஏற்படுத்துவதனால் தமது தமிழீழ இலக்கை அடைவதற்கான முக்கிய தடைகளில் ஒன்றை நீக்கலாம் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கு முஸ்லிம் ஊர்காவல் படை இலங்கை இராணுவம் என்பற்றின் தமிழர் மீதான எதிர்வினைச் செயற்பாடு மூலமாக தங்களின் "பங்களிப்பை" செய்வார்கள் என்பதை புலிகள் உணர்ந்து திட்டமிட்டே இதனை செய்தார்கள். அதிலும் இவாறான தமிழ் முஸ்லிம் பகை முரண்பாடு வட மாகாணம் போல் அல்லாது தமிழ் முஸ்லிம் சமூகங்களுகிடையிலே உருவாக்கப் படுவது புலிகளுக்கு மூலோபாய தேவையாகவிருந்தது.
ஆயினும் 1990 ஏறாவூர் படுகொலைகளை செய்ய முன்னர் ஏறாவூர் பிரதேச சபைக்குட்பட்ட  தமிழ் பகுதிகளான ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சிகளில்  மற்றும் குடியிருப்பு எல்லைப்புற தமிழ் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்த பின்னரே புலிகள் தமது தாக்குதல்களையும் செய்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப்படுகொலைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஆத்திர உணர்வு இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது அதனால் ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் தமிழ் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டன  இக்கால கட்டங்களில் இரு பிரதேசங்களுக்குள்ளும் இடையில் பிரயாணம் செய்ய நேரிட்ட மக்கள் பரஸ்பரம் புலிகளின் மிலேச்சத்தனமான படுகொலையால் உருவாக்கப்பட்ட இன வெறிக்கும் குரோதத்துக்கும் பாரிய விலையை வழங்க வேண்டி நேரிட்டதுடன் ஒரு நீண்டகாலத்துக்கு பகைமையும்  திரட்சி கொண்டது.
ஒரு புறம் புலிகள் மிருகத்தனமாக முஸ்லிம் மக்களை படுகொலை செய்தபோதும் அவர்களின் சமூகப் பிரமுகர்களை கடத்தியபோதும் இரரணுவம் கொண்ட "அனுதாபம்" புலிகளால் நசுக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குள் ஒரு சிறு குழுவினரின் தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வழிகோலிற்று. அதுபோலவே தமிழ் மக்களுக்குள்ளும் தமது குடும்பத்தினரை தமிழ் முஸ்லிம் வன்முறைகளால் மற்றும் கடத்தல்களால் இழந்தவர்கள் புலிகளின் அனுசரணையுடன் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முன்னின்றனர். இதனால் புலிகள் இருக்கும் வரை பதிலுக்கு பதில் நடவடிக்கையாக பல அசம்பாவித சம்பவங்கள் இரண்டு இனத்தவரிடையேயும் நடைபெற்றுள்ளன என மனித உரிமை அமைப்புக்களின் சில பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
please click heading for full story
www.thenee.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக