வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தேசியத் தலைவர்தானே முதல் குற்றவாளி, துரோகி?சதா ஆயுதங்களுடன் காட்சி தருவது உதைக்குதே?

கனடா உலகத்தமிழர் இயக்கஊழியர்களால்தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

(திகதி: 16.09.2010) (நன்றி: சங்கதி இணையத்தளம்)

அன்பான உறவுகளே!
எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் சங்கதி இணையத்தளமானது பெரும் சவால்களுக்கும், சதிகளுக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது. இதனை பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இருப்பினும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கனடா உலகத்தமிழர் ஊழியர்கள் சிலரால் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. இதை நாம் இனியும் கண்டும் காணாது இருக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றை வெளிக் கொணர்வதின் மூலம் தமிழீழத் தேசியத் தலைவரினால் கட்டியெழுப்பப்பட்ட உலகத்தமிழர் இயக்கத்தினுள் கடந்த பல வருடமாக பெருந்தொகைப் பணத்தினை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு செயற்பட்டுவரும் ஒரு சிலரின் தவறான போக்கை மக்கள் முன் கொண்டுவருவது எமது தலையாய கடமையாகவுள்ளது.

கனடா உலகத்தமிழர் இயக்கம் என்பது ஒரு தேசிய இயக்கத்தின் கிளை. இந்த இயக்கத்தை குறை கூறுவதோ அல்லது சேறு பூசுவதோ எமது நோக்கமல்ல. இந்த இயக்கம் தொடர்ந்தும் எமது கனடிய மக்களை வழிநடத்தப்போகும் இயக்கம். இந்த இயக்கத்தைத் தவிர வேறு யாரும் கனடிய மக்களை வழி நடாத்துவதற்கு தகுதியானர்வர்கள் அல்ல. அதற்கு நாம் அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதில் எமக்குள் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த புனிதமான இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி பலர் எமது மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது.
இப்படியான சிலரை அடையாளப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் போது கனடா உலகத்தமிழர் இயக்கம்; என்கிற அமைப்பை நாம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இனிமேல்
விடயத்துக்கு வருவோம்.

காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

முதலாவது காட்டிக் கொடுப்பு:

2004ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வான பொங்குதமிழ் நிகழ்வு இலங்கை அரசை மட்டுமல்ல உலக அரசுகளையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு. பல லட்சம் மக்களை ஒரே திடலில் ஒன்று கூட வைத்து உலகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பிய நிகழ்வு. அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் சதா என்கிற இளைஞன். பல நூற்க்கணக்கணக்கான கல்லூரி மாணவர்களை தன்னோடு இணைத்து திறமையான ஆளுமையோடு செயற்பட்ட இந்த இளைஞன் தான் இவர்களின் காட்டிக் கொடுப்புக்கு இலக்கான முதலாவது இளைஞன்.

காட்டிக் கொடுப்புக்கான காரணம்:

2004ம் ஆண்டு காலப் பகுதியில் உலகத் தமிழருக்கு பொறுப்பாக இருந்த மரியதாஸ் அவர்களின் காலப்பகுதியில் தான் கனடாவில் பொங்கு தமிழ் எனும் சரித்திர நிகழ்வு பதிவானது. இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இளையோர் ஆகிய சதா மற்றும் அவரது நண்பர்களிடம் மரியதாஸ் அவர்கள் இப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். இந் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறிய சில மாதங்களின் பின் தனது குடும்பச்சுமை காரணமாக மரியதாஸ் அவர்கள் தாமாகவே உலகத்தமிழர் பொறுப்பாளர் பதவியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் என்கிற கிராஞ்சி பொறுப்பாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் தான் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் ஆரம்பமாகின. தமிழ் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த சில மாதங்களின் பின் மதன் என்கிற இலங்கை அரசின் உளவாளி உலகத்தமிழருக்குள் உள்நுழைந்தான். தான் தேசியத் தலைவரின் நேரடி செயற்பாட்டில் இயங்குவதாக கூறிக்கொண்டு உள் நுழைந்த இவனை வன்னியுடன் உடனுக்குடன் தொடர்கொள்ளக்கூடிய வசதிகள் இருந்தும் இவர்கள் இதுபற்றி வன்னித் தலைமைக்கு தெரிவிக்கவில்லை.

அவன் சுமார் 3 மாதங்கள் உலகத்தமிழர் அலுவலகத்துக்குள்ளேயே இருந்து கொண்டு அனைத்து செயற்பாடுகளின் விபரங்களையும் பெற்று இலங்கை அரசுக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிலையில் தான் இவன் இலங்கை அரசின் உளவாளி என்பதை கண்டு பிடித்தவர்தான் சதா. இப் பாரிய தவறினால் தமக்கு தலைமையிடமிருந்து சிக்கல்கள் வரப்போகின்றதென்பதை அறிந்த, தமிழ், கமல், அருமை மற்றும் கண்ணன் (யு1) ஆகியோர் சதாவை துரோகிப்பட்டம் சுமத்தி வெளியே விட்டார்கள். ஆனால் பொங்கு தமிழ் நிகழ்வின் ஏற்;பட்ட எழுச்சிக்குக் காரணமாக இருந்த சதாவை சிறிலங்கா உளவுத்துறை எப்படியாவது செயற்பாட்டிலிருந்து முடக்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தது.

கனடிய இறையாண்மைக்கு எதிராக செயற்படாத சதாவை எந்தக்குற்றச் சாட்டிலும் கைது செய்ய முடியாது என்பதை அறிந்த சிறிலங்கா அரசு அவரை கனடாவிற்கு வெளியே வரும் போது கைது செய்யவேண்டுமென்று காத்திருந்தது. சதாவினால் தமக்கு பிற்காலத்தில் பிரச்சனை வரும்; என்பதற்காக அவரை எப்படியாவது மாட்டிவிட வேண்டுமென்பதில் இவர்களும் குறியாக இருந்தார்கள்.

இந்நிலையில் சதா அமெரிக்கா செல்லவேண்டிய ஒரு தருணம் வந்தது. ஆனால் சதா அமெரிக்கா வந்தால் அவர் கைது செய்யப்படுவார் எனவே அவரை அமெரிக்காவிற்கு வரவேண்டாம என சொல்லும் படி அமெரிக்க நண்பர் ஒருவர் உலகத்தமிழர் ஊழியர் அருமைக்கு தெரிவித்திருந்தார். இத் தகவலை அருமை கமல் ஊடாக உ.த. பொறுப்பாளர் தமிழுக்கு சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த மூவரும் இத் தகவலை சதாவிற்கு சொல்லாமல் விட்டதோடு மட்டுமன்றி சதா அமெரிக்காவிற்கு விடுதலைப்புலிகளின் ஆயுத முகவராக வருகிறார் என சொல்ல வேண்டியவர்ளுக்குச் சொல்லிப் போட்டுக் கொடுத்தார்கள். அதன் பயன் என்ன? திருமண வயதில் உள்ள இரண்டு தங்கைகள், உடல்நிலை முடியாத தந்தை, தாய் ஆகியோரைப் பார்க்க வேண்டிய இந்த இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

இத்தோடு முடிந்ததா இவர்களின் காட்டிக் கொடுப்புக்கள்? தற்போது அரவிந்தன் என்கிற இன்னொரு இளைஞன்!

இந்த இளைஞன் செய்த தவறு என்ன? உலகத்தமிழர் ஊழியர் கமலிடம் கேள்வி கேட்டது. இவரை காவல்துறையிடம் மாட்டிவிடுவதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்ன?
நாடுகடந்த அரசு என்றும் மக்களவை தேர்தல் என்றும் நடாத்தி பல லட்சக்கணக்காண மக்களின் பணத்தை விரயப்படுத்துகிறீர்களே, அதை விடுத்து எம் இன விடுதலைக்காக பல ஆண்டுகள் களமாடி இன்று சிறிலங்கா அரசின் பிடியில் இருக்கும் எமது பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், திறந்த வெளிச் சிறையிலே அடைபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விடுவிப்பதற்கு ஏதாவது செய்யாமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்பது தான் இவர் கேட்ட கேள்வி. இது தேசவிரோதமா?

தங்கள் இருப்புகளை தக்கவைப்பதையே குறியாகக் கொண்ட உலகத்தமிழர் ஊழியர் தமிழ், கமல், அருமை ஆகியோர் ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாக எந்த அமைப்புக்கு தாம் சேவை செய்து வந்தோமோ, எந்த அமைப்பினால் சுகபோக வாழ்வை அனுபவித்தோமோ என்பதை மறந்து, அதற்கு பதிலாக அந்த இளைஞன் தம்மை தாக்க வந்ததாகவும், ஈழ தமிழர்களின் கனவாகிய தமிழ்ஈழ தேசத்தை கட்டியெழுப்ப போராடிய அமைப்பின் போராட்டங்களில் பங்கேற்றுக்கொண்டார் என்றும் கூறி அரவிந்தனை கைது செய்யபட வைத்துள்ளார் உலகத்தமிழர் ஊழியர் கமல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடைபெற்ற பல ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில, “உலகமே எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்;” என பதறியடித்த பல்லாயிரக்கணக்காண உறவுகளில் இந்த அரவிந்தனும் ஒருவன். எம்மால் காப்பாற்ற முடிந்ததா? அந்த வேதனையும் சோகமும் என்றுமே ஒரு உண்மையான தமிழனின் நினைவை விட்டு அகலாது. நாங்கள் தான் அமைப்பு என்று கூறிக்கொண்டு, இலங்கை அரசுக்கு எதிரான எந்தவொரு கவனயீப்புப் போராட்டங்களையும் நடத்தாது, உணர்வுள்ள தமிழ் சமூகத்தையும் நடத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தால் யார் தான் கேள்வி கேட்க மாட்டார்கள்?

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
(சங்கதிக்காக அற்புதன்)

எமக்குள் கிளம்பும் சில கேள்விகள்? - சாகரன்
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக என்று பார்த்தால் என்றும் ஏகபோகத்தை விரும்பிய தேசியத் தலைவர்தானே முதல் குற்றவாளி, துரோகி?
தேசியத்தலைவரின் இறுக்கமான கட்டுப்பா ட்டிற்குள் கட்டப்பட்ட உலகத் தமிழர் அமைப்புக்குள் எப்படி ஐயா இலங்கை அரசின் உளவாளிகள் உள் புகுந்தனர்?
சதா ஆயுதங்களுடன் காட்சி தருவது உதைக்குதே? கூடவே தங்கை வயதான தாய் தந்தை எல்லாம் சரிதான். ஆனால் வன்னியில் வீட்டிற்குள் பலரும் என்று கட்டாய 'லபக்' இன்போது எங்கோ போனது வயது போன தாய் தந்தையர் இளம் சகோதரிகள் என்ற விடயம்?
பொது மக்களிடன் உறுஞ்சியெடுத்த பல இலட்சம் பணத்தில் புலம் பெயர் நாடுகளிலும் ஏன் ஈழத்தில் தலைவர் உட்பட (நீச்சல் குளம் களியாட்டம) பலரும் சொகுசு வாழ்க்கை வாழுகின்றனர் என்று ஐனநாயக முற்போக்கு சக்திகள் கூறியபோது நீங்கள் அவற்றை சீர்தூக்கிப் பார்க்காமல் துரோகிகள் பட்டம் கொடுத்து ஈழத்தில் மண்டையில் போட்டதும் புலத்தில் கால்களை அடித்துடைத்ததும் கடைகளை அடித்து நொருக்கியடையும் தானே செய்தீர்கள் அப்போது எங்கே போனது உங்கள் புத்தி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக