வியாழன், 16 செப்டம்பர், 2010

வாகன உற்பத்தியில் 7 வது இடத்தை வகிக்கிறது இந்தியா என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த 'ஃபிக்கி' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் கனரகத் தொழில்கள் துறை செயலாளர் பிஎஸ் மீனா கூறுகையில், "கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு 'ஆட்டோ மிஷன் பிளான்' எனும் திட்டத்தை வகுத்தது. அதன்படி வரும் 2016ம் ஆண்டில் வாகன உற்பத்தியில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாக வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இப்போதே அந்த நிலையை இந்தியா எட்டிவிட்டது.
வரும் 2020-ம் ஆண்டு உலகின் 5 வது பெரிய வாகன உற்பத்தி நாடாக இந்தியா மாறியிருக்கும்....", என்றார்.இன்றைய நிலவரப்படி வாகன உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2009-2010-ம் ஆண்டில் இந்தியாவின் வாகன உற்பத்தி 1,40,49,830 ஆகும். இதற்கு முந்தைய ஆண்டு உற்பத்தி 11,172,275 ஆக இருந்தது.கடந்த நிதி ஆண்டில், வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் முறையே 32, 49 மற்றும் 31 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக