தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 7 ஆவது தடவையாக இன்றைய தினம் பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு தமிழீழ விடுதலைக் கழகத்தில் கூடுகிறது.இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு விரைந்த தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை என்பன குறித்தும் மேற்படி அரங்கத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்போது வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், போர் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக