வெள்ளி, 24 செப்டம்பர், 2010

46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா.காமன்வெல்த் போட்டியை நடத்த

டில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்த, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மைதானங்கள் மற்றும் விளையாட்டு கிராமம் முழுமையாக தயா ராகாததால், பெரும் பிரச்னை எழுந்துள் ளது. இந்தச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, இந்தியா லஞ்சம் கொடுத்த விபரத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை "தி டெய்லி டெலிகிராப்' அம்பலப்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி: காமன்வெல்த் விளையாட்டை 2010ல் நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு கடந்த 2003ல் ஜமைக்காவில் நடந்தது. அப்போது இந்தியா(டில்லி) மற்றும் கனடா(ஹாமில்டன்) இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மற்ற நாடுகளின் ஆதரவை பெற, அவற்றுக்கு தலா ரூ. 32 லட்சம், லஞ்சமாக கொடுக்க கனடா முன் வந்தது. ஆனால், இந்தியா சார்பில் 72 உறுப்பு நாடுகளுக்கு பயிற்சி திட்ட உதவி என்ற பெயரில், இரண்டு மடங்காக தலா ரூ. 64 லட்சம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 46 கோடி செலவு செய்தது. இத்தொகையை பெற்ற சிறிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் இந்தியா, கனடாவை 46-22 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக