புதன், 22 செப்டம்பர், 2010

4பலி; 16 பேர் காயம்: மன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் வழியில்

ஆனமடுவ- சிலாபம் வீதியிலுள்ள முதலிக்குளம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆனமடுவ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி நேற்று அதிகாலை 4.00 மணியளவில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்திலும் மரத்திலும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவ்விபத்தில் இரு ஆண்களும், இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மன்னார் எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த முஹம்மத் நkர் முஹம்மத் பஸ்ரி (வயது 21), மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த எமலின் அலெக்ஸியா பெரேரா (வயது 30) கிரேண்ட்பாஸைச் சேர்ந்த பெருமாள் (வயது 65), வெள்ளையப்பா புவமணி (வயது 37) ஆகிய நால்வருமே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின. இந்த நால்வரதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதேவேளை இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் உடனடியாக மேலதிக சிகிச்சைக்கென குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர  (மேலும்) 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக