உசாரு…. ஐயா! உசாரு…..
கிளம்பீட்டாங்க….. ஐயா!…. கிளம்பீட்டாங்க ….மீண்டும் உண்டியல் குலுக்க.
(தானாமூனா)
உசாரு ஐயா உசாரு….. கிளம்பீட்டாங்க ஐயா…. கிளம்பீட்டாங்க ….மீண்டும் உண்டியல் குலுக்க. தற்போது தலைவரின் அவசர நிதித் தேவை என்று சொல்ல முடியவில்லை. தமிழீழ வைப்பகத்தில் வைப்பிலிட்டு உலக நாடுகளுக்கு காட்டி தமிழீழ பிரகடனம் செய்யப் போவதாக சொல்ல முடியவில்லை, சாம் 7 வாங்கவென்று காட்ட முடியவில்லை. இறுதிக்கட்ட போர்நிதி என்றும் சொல்ல முடியவில்லை, ஏன் சுனாமி என்றும் சொல்லி சுருட்ட முடியவில்லை. பின்னே என்ன சொல்லிப் புறப்பட்டு விட்டார்கள்? மகிந்தாவின் அனுசரயையுடன்?, தலைவர் கேபியின் ஆசீர்வாதத்துடன் புனர்வாழ்வு என்று புறப்பட்டு விட்டார்கள்.
மொத்தத்தில் சும்மா இருந்து கொண்டு பணம் பண்ண (குறும்)தேசியத்தின் பெயரை பின் தள்ளி வன்னியில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கான நிவாரண நிதி என்று புறப்பட்டு விட்டார்கள் உண்டியலைக் குலுக்கிக் கொண்டு. இதனையும் நம்பி ஏமாற இன்னும் சில கூட்டம் தமது ரத்தத்தை குளிர்நாடுகளிலும் வேர்வையாக சிந்தி உழைத்த பணத்தில் மாதம் மாதம் கொடுத்து மீண்டும் ஏமாற. சொல்லிபுட்டோம் ஆமா... வேறு என்ன எம்மால் செய்ய முடியும்.
ஏற்கவே 30 வருடங்களாக தலைவரின் அவசர நிதி, விமானம் வாங்க நிதி, தமிழீழ வைப்பு நிதி, திருப்பிக் கொடுக்கும் நிதி, சுனாமி நிதி, இறுதிக்கட்ட நிதி என சேர்த்த பல கோடி டாலர்கள் அங்காங்கே தனி நபர்களிடமும், சொத்துக்கள் என்றும் நிறுவனங்களில் என்றும் மேலும் நெடியவனிம் ஒரு பகுதி, கேபி யிடம் இன்னொரு பகுதி, உருத்திரகுமாரி டம் மற்றைய பகுதி கனடாவில் வியாபார ஸ்தாபனங்களில் இன்னொரு பகுதி நிதி….. இப்படிப் பல கோடி டாலர்கள் இருக்க இன்னும் நிதி வேணுமாம்.
இருக்கும் இவ் நிதிகளை பயன்படுத்தினாலேயே இலங்கை வாழ் தமிழ் மக்கள் ‘பில் கேர்’ அளிவிற்கு வசதியாக இல்லாவிட்டாலும் யாழில் வாழும் 'விண்ணன்' (யார் இந்த 'விண்ணன்' என்கின்றீர்களா? யாழில் சென்று கேட்டால் எந்தச் சின்னப்பிள்ளையும் வாய்திறந்து சொல்லப் பயப்பிடும் 'தொழில் அதிபர்'. அதில் சிறப்பு என்னவென்றால் புலிகளின் பிரசன்ன காலத்திலும், புலிகளின் பிரசன்னம் அற்ற இன்றைய காலத்திலும் இவர்தான் யாழின் பணக்கார 'தொழில் அதிபர்') அளவிற்கு வசதி படைத்தவர்களாக வாழ முடியும். தமிழ் மக்களே சிந்தியுங்கள். நீங்கள் கேணயர்களாக இருக்கும் வரை சும்மா இருந்து கொண்டு உல்லாசம் காணும் இந்தக் கூட்டம் கொள்ளையடித்துக்கொண்டுதான் இருக்கும்.
யார் அந்தக் கூட்டம்? நோர்டோவின் கனடாக் கிளையின் செயற்திட்டங்களைக் கவனிக்கவென திரு. இன்பம் பேரின்பநாயகம், திரு. ரெஜி சபாரத்தினம், திரு. சிறீரஞ்சன் கந்தையா, திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. சக்தி சிவா, திரு. இராஜரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர். இதே கூட்டம்தான் கடந்த 30 வருடகாலமாக புலிகளுக்க பல்வேறுவகைகளில் நிதியைச் சேகரித்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து இன்னும் பலரும் கடந்த காலத்தில் செயற்பட்டனர் புலம்பெயர் நாடுகள் எங்கும்.
- தானாமூன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக