செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக்க 25 ஐ.தே.க. எம்.பிக்கள் இரகசியத் திட்டம் – 18 பேரின் ஆதரவுடன் ரணில்

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதற்காக ஏனைய எதிர்க்கட்சி களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர் களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி யில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத் துடன் இணைந்து விட்டனர். இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந் நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக் குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள் ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களும் கட்சி யை விட்டு தனித்து இயங்கப்போவதாக எச்சரித் துள்ளார்.

அத்துடன் தமது கோரிக்கையை வலி யுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போ வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் புனரமைப்புக்கள் மேற் கொள்ளப்படாவிட்டால் இந்த தீர்மா னத்தை தாம் மேற்கொள்ளப்போவ தாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக