புதன், 15 செப்டம்பர், 2010

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மத்திய ரசாயண மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை கேட்கும் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். மதுரை புறநகர் பகுதியான புரங்குடி, அச்சம்பத்து பகுதிகளில் பயணத்தை தொடங்கிய அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் அவரிடம் தெரிவித்தனர். அச்சம்பட்டி சாலையை அகலப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து வடிவேல்கரை கீழமாத்தூர், மேலமாத்தூர் உள்ளிட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மு.க.அழகிரி மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலூர் அருகே டயர் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு செய்து வரும் உன்னதமான திட்டங்களால், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக