செவ்வாய், 7 செப்டம்பர், 2010

200 போலி பைலட்டுகள் இருக்கிறார்களாம்,'டுபாக்கூர்' சீனா

சீனாவில் போலி விமான பைலட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு, போலி டாக்டர்களைப் பிடிப்பது போல போலி பைலட்டுகளைப் பிடிக்கும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24-ந்தேதி வடக்கு சீனாவில் ஹெய்லான்ஜியாங் மாகாணத்தில் உள்ள யிசுன் விமான நிலையத்தில் ஹெனான் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கியபோது விமானம் ஓடு தளத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 42 பேர் உயிர் இழந்தனர்.

இதை தொடர்ந்து சீன விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது. அப்போது, சீன விமான நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகளின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, அங்குள்ள விமான நிறுவனங்களில் 2008-09ல் விமானியாக பணியில் சேர்ந்த 200 பேர் போலியான தகுதி சான்றிதழ்கள் அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 103 பேர் ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஹெனான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் இந்த ஷென்ஜென் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக