ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

2வது ஐபிஎல் தொடரில் சூதாட்டம்-சந்தேக வலையில் 29 வீரர்கள்

லண்டன்: தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2வது ஐபிஎல் தொடரின்போது 2 ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட 29 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளனவாம். இதுகுறித்த செய்தி [^]யை லண்டனைச் சேர்ந்த தி சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தி...

இதுதொடர்பான ரகசியப் பட்டியலை ஐசிசியின் ஊழல் தடுப்புபிரிவு தொகுத்துள்ளது. அதில், சில முக்கிய, முன்னணி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து [^] அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

இந்த போட்டித் தொடரின்போது கடைப்பிடிக்கப்பட்ட சூதாட்ட முறைகள் இதுவரை யாரும் அறியாததாகும். புதிய முறையில் இதைச் செய்துள்ளனர் என்று அந்த செய்தி கூறுகிறது.

இந்த சந்தேக வலையில் இந்திய வீரர்கள் யாரும் உள்ளனரா என்பது தெரியவில்லை.
பதிவு செய்தவர்: தி மு க
பதிவு செய்தது: 12 Sep 2010 6:09 pm
ச்சா..... இது தெரிஞ்சு இருந்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பதவி கேட்டுருக்கலாம்.

பதிவு செய்தவர்: Radhakrishnan
பதிவு செய்தது: 12 Sep 2010 4:50 pm
இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.பொய் நியூஸ் போடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக