வியாழன், 16 செப்டம்பர், 2010

யாழ். குடாவில் மீளக்குடியேற 150 சிங்கள குடும்பங்கள் விண்ணப்பம்

யாழ். குடா நாட்டில் மீளக்குடி யேறுவதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் சிவில் விவகார பொதுசன அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த 150 குடும்பங்களின் உறுப்பினர்களும் இடம் பெயர்ந்து அனுராதபுரம், மிஹிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களின் இருப்பிடங்களில் தற்போது தங்கி இருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த இந்த சிங்களக் குடும்பங்களின் உறுப்பினர்களே திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் வசித்துள்ளார்கள். அவர்களது காணிக்கான உரிமைப் பத்திரங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக