வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

PMK to contest 100 இடங்களில் பா.ம.க., போட்டி: ராமதாஸ்

""தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டியிட்டு, வெற்றி பெரும் வகையில் கிராமம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்கள் மூலம் பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் விளக்கப் பட்டு வருகின்றன,'' என காடையாம்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டியில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட இளம்பெண்கள், இளைஞர்களுக்கான பயிற்சி முகாமில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் படிப்பு, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கத்தை துவக்கினேன். பின், வன்னியர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ம.க., வை துவக்கினேன். உங்களில் ஒருவர் கேட்டார், ஏன் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிறீர்கள் என்று, எந்தக் கட்சி தமிழகத்தில் கூட்டணி மாற்றம் செய்ய வில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு தான் என உறுதி அளித்தால், நான் தனித்து போட்டியிட தயார். அது உங்களைப் போன்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்ய 117 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் போதும், 100 தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டு வென்றாலே ஆட்சியை பிடித்து விடலாம்.

வன்னியர்கள் வாழ, வளர, உயர தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந் தால் மட்டுமே முடியும். வன்னியர்கள் ஓட்டு வன்னியர்களுக்கு தான் என, நாம் அறிவித்தால் பிற ஜாதியினர் ஓட்டு வன்னியர்களுக்கு இல்லை என்னும் மாயத் தோற்றத் தை உருவாக்குகின்றனர். ஆனால், அதே நேரத்தில் பிற சமூகத்தினருக்கு வன்னியர் ஓட்டு போட வேண்டுமாம். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், அது சமூக நீதி ஆட்சியாக அனைத்து ஜாதி மக்களும் பயன் பெற முடியும். வரும் தேர்தலில் பா.ம.க., 100 தொகுதிகளில் வெற்றி பெரும் வகையில் இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பா.ம.க.,வின் கொள்கை, கோட்பாடுகள், வன்னியர்கள் வளம் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கிராம மக்களுக்கு தெரிவித்து ஒவ்வொருவரும் வரும் தேர்தலில் 100 ஓட்டுக்களை பா.ம.க., வுக்கு பெற்றுத் தரவேண்டும், என்றார்.

ஜெயகுமார் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-27 07:24:52 IST
காமிடி பீஸ் ராமதாஸ் எப்படி இப்படில்லாம் யோசிக்க தோணுது. முதல்ல உன் பலம் என்னவென்று யோசி. நீ ஒரு சைபர். உன்னக்கு எப்படி 100 தொகுதியில வேற்றி பெற முடியும்? 2011 தேர்தலோட உன் கதை முடிய போகுது....
Ramesh - Chennai,இந்தியா
2010-08-27 07:22:40 IST
ஆசிரியரே காலையிலேயே சிரிப்பு மூட்டாதிங்க. மரம் வெட்டி ஒரு டம்மி பீஸ். அவன் சொல்றத எல்லாம் போடாதிங்கே. மரம்வெட்டி கொஞ்சம் அடங்குடே....
Senthil - தைலாவரம்,இந்தியா
2010-08-27 07:21:57 IST
அய்யா உங்கள் கொள்கை தான் என்ன? இந்த உலகம் இன்னுமா உங்களை நம்பிக்கிட்டு இருக்கு. பாவமடா தமிழ்நாட்டு மக்கள். ஆண்டவா எப்படியவது இந்த கொசு தொல்லையில் இருந்து காப்பாத்து....
john - tirunelveli,இந்தியா
2010-08-27 07:04:08 IST
" எங்கள் சோத்துக்கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் "...
சபூ dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-27 06:25:17 IST
மருத்துவர் கொய்யா காமெடி கிமெடி பண்ணலியே ?...
ராஜேஷ் - திண்டிவனம்,இந்தியா
2010-08-27 06:25:16 IST
அய்யா .. சூப்பர் .... உங்கள் பேச்சு வெறும் பேச்சல்ல ... கவிதை ... கவிதை... நம்ம ஆட்சி தான் 2111 ல... அப்போ எல்லோருக்கும் 111 போடுவோம் .....வரும் 2011 தேர்தலில் ஒன்று மட்டும் நிச்சயம் ஐயா. "100 க்கு ரெண்டு தான் கிடைக்கும். எந்த ரெண்டு தெரியுமா ... நூறில் இருக்குற ரெண்டு முட்டைகள் தான்....
mujib - chennai,இந்தியா
2010-08-27 06:23:11 IST
பா ம க 234 ல் போட்டி இட வேண்டும்...
பாபு - சென்னை,இந்தியா
2010-08-27 06:14:39 IST
எங்கள வச்சி காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலியே???????...
Kim - korea,இந்தியா
2010-08-27 06:00:48 IST
நல்ல கனவு காணுங்கள் !எல்லோருக்கும் உரிமை உள்ளது கனவுகான !!நீங்கள் 100 சீட் விஜயகாந்த் 100 சீட் காங்கிரஸ் 34 சீட் ஆக நீங்கள் ஆட்சியை பிடித்துவிடலாம் ! நன்றி...
mike - Newzealand,இந்தியா
2010-08-27 05:13:25 IST
வன்னியர்கள் வாழ, வளர, உயர தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் மற்றவர்கள் சாக வேண்டும்...
Arif - துபாய்,இந்தியா
2010-08-27 05:13:22 IST
ஹாய், லேட் ஸ்டார்ட் தி ஹிடிங் கவுன்ட் அபௌட் தி ராமதாஸ்.......
sunil - tanjore,இந்தியா
2010-08-27 05:08:01 IST
......... ஒரு இடம் கூட வராது......... ஏன்.......... ஏன்டா இப்படி அலையிறிங்க...
மனிதன் - சென்னை,இந்தியா
2010-08-27 05:07:41 IST
நீ ஒரு ஆணாக இருந்தால் இதை நிரூபித்து காட்டு....
LOGAN - FREMONT,யூ.எஸ்.ஏ
2010-08-27 04:36:41 IST
Hats off Dr....
2010-08-27 04:34:06 IST
இன்று வெள்ளிக்கிழமை நோன்பு மாதம் எப்படி பொழுதை போக்குவது என்று கவலயா இருந்தது. தினமலர்..அரபு நாட்டில் உள்ள எங்களை சிரித்து மகிழ ஒரு நல்ல செய்தி கொடுத்துள்ளார்கள் நண்பர்களே..கருத்தை அள்ளி விடவும்........
கே.viswanathan - chennai,இந்தியா
2010-08-27 04:26:45 IST
குட் ஜோக், பெஸ்ட் ஜோக்!!!!!!!!!...
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-08-27 04:26:43 IST
நான் எதாவது ஒரு கட்சியில கூட்டணி சேருகிற வரைக்கும் இப்படித்தான் கொடைச்சல் கொடுத்துகிட்டே இருப்பேன்..இன்னைக்காவாது 100 தொகுதின்னுதான் சொன்னேன்..நாளைக்கு 234 ன்னு சொல்லுவேன்..அப்புறம் பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் நாங்கதான் ஆட்சிய புடிப்பேன்னு சொல்லி ஒவ்வொரு நாளைக்கும் ஏதாவது ஒரு அளப்பறைய கொடுத்துகிட்டே இருப்பேன்..எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..ஒன்னு ஏதாவது கட்சியில இருந்து அழைப்பு வரணும்..இல்லேன்னா ஒவ்வொரு நாளும் என் அறிக்கைய படிச்சிட்டு உங்க கண்ணுமுழி பிதுங்கி வெளியே வரணும்.....
குப்பன் - சென்னை,இந்தியா
2010-08-27 04:25:15 IST
ராமசாமி படையாச்சி மாதிரி ராமதாஸ் ஏன் தன் ஜாதியை பெயருக்கு பின்னால் போடுவதில்லை ? ராமதாஸ் படையாச்சி பேரு நல்லாதானே இருக்கு ? அன்புமணி படையாச்சி இன்னும் சூப்பர் ! சாதிவாரியா கணக்கு வேண்டும் ஆனால் பெயருக்கு பின்னால் ஜாதி வேண்டாம் , என்ன கணக்கு இது ?...
குணா - குவைத்,குவைத்
2010-08-27 04:23:17 IST
நல்ல முயற்சி வாழ்த்துகள்....
ஏற்காடு வீராசாமி - நெல்லை,இந்தியா
2010-08-27 04:15:27 IST
கனவு காணுங்கள் அப்படின்னு ஒரு தலைவர் சொன்னார்... அதற்காக இப்படியா ??...
ராஜன் - சேலம்,இந்தியா
2010-08-27 03:54:35 IST
அறிவு இருக்கா உனக்கு? தமிழ்நாட்டில் வன்னியர் மட்டுமல்ல, இன்னும் பல தரப்பட்ட மக்கள் வாழ்றது உனக்கு தெரியல? வன்னியர் வளம்பெற வன்னியர் ஆட்சின்னா, அடுத்த ஜாதிக்காரன் அவ்வளவு தானா? இப்பிடி ஒவ்வொருத்தனும் நினச்சான்னா, நாடு உருப்படுமா? உனக்கு பதவி ஆசை பாடா படுத்துது. எப்படியும் உம்மவன முதல்வர் பதவியில் அமர்த்தி பார்க்கனும்னு ஆசை. அதற்கு வழியிருக்குடா. பேசாம ஒரு டுடோரியல் காலேஜ் தொடங்கி, அதுக்கு அவன முதல்வர் ஆக்கிடு. உன் கடைசி ஆசை நிறைவேறிடும். உனக்கு புத்தி மழுங்கிடுச்சு. இதுவரைக்கும் வன்னியருக்குன்னு நீ என்ன செஞ்சிருக்கே? வன்னியன் பெற சொல்லி, நீ, உன் மகன், பொண்டாட்டி, மருமக, பேரன், பேத்தி, எல்லோரும் சொகுசு வாழ்க்கை வாழுறீங்க. வன்னியன் இன்னும் அப்பிடியே தான் இருக்கான்..கடந்த பாராளுமன்ற தேர்தலில் உனக்கு வச்ச ஆப்பு, வரக்கூடிய தேர்தலின் விழக்கூடிய அடி, நீ மட்டுமல்ல, எந்த பொறம்போக்கும், ஜாதி பெயரில் அழிச்சாட்டியம் பண்ண முடியாத அழவுக்கு இருக்கும்....
சுப்பாண்டி - ...பட்டி,இந்தியா
2010-08-27 03:34:10 IST
/////தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், அது சமூக நீதி ஆட்சியாக அனைத்து ஜாதி மக்களும் பயன் பெற முடியும். /// ஜாதிய தவிர இந்த ஆளுக்கு எதுவும் தெரியாது. ஒரு ஜாதியின் நலனுக்காக கட்சி என்று சொல்லும் இவனிடம் இருந்து பொது மக்கள் என்ன எதிர்பக்க முடியும்....
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-27 03:30:43 IST
அய்யா டாக்டர், நூறு தொகுதிலேயும் என்ன விடுதலை போராட்ட தியாகிகள் வேட்பாளரா, இல்லை உங்களிடம் உள்ள காடுவெட்டி,மரம்வெட்டி,ரௌடி,மொள்ளமாரி,இவங்கதான் வேட்பாளாரா? டாக்டர் மக்களை ஜாதி பேரை சொல்லி சீன்டிவிடுவது,மிரட்டல்,அராஜகம் எல்லாம் பண்ணினா அப்பறம் உன் பயன் சொல்லுவதுபோல் எனக்கு ப.மா. கா பேரை சொன்னாலே வெறி வருது ஆமாம்....
zee - அஜ்மான்,இந்தியா
2010-08-27 03:08:27 IST
நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க ...............
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-27 03:04:23 IST
நீங்க ஒன்னும் விலகவும் வேண்டாம் கழுவவும் வேண்டாம் எங்களுக்கு நீங்க யாருன்னு நல்லா தெரியும் உங்க டைம் வேஸ்ட் பண்ணாம நல்லா புல் மீல்ஸ் சாபிட்டு AC போடு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க சார். மாலையில் ஒரு நல்ல டிப்பன் வித் கபே குடிச்சிட்டு சன் டிவி பாருங்க. இல்லாட்டி கலைஞர் டிவி ல மானாட மயிலாட பாபின்களா சுமா பேட்டி கீடினு ......
Hari - Dallas,யூ.எஸ்.ஏ
2010-08-27 02:53:14 IST
All the best to PMK to loose in all the 100 constituencies....
mansoor - சபாத்குவைத்,குவைத்
2010-08-27 02:39:45 IST
ராமதாஸ் ஒரு காமெடி ஆளு கவலைபட தேவை இல்லை...
கிராமத்தான் - saltlakecity,யூ.எஸ்.ஏ
2010-08-27 02:06:51 IST
அப்பாடா. இந்தத் தடவை உலக மக்களாகிய உங்களனைவரையும் அய்யா அவர்களை வாழ்த்த அழைப்பதில் ரொம்ப பெருமைப் படுகிறேன். இதற்க்குமுன் பல தடவை அய்யா அவர்கள் தனது மானத்தை துச்சமாக நினைத்து தியாகம் செய்துவிட்டதால், தயவுசெய்து நண்பர்கள் அனைவரும் அதைப் புரிந்து கொண்டு, அய்யாவிடம் மிஞ்சியிருக்கும் இருக்கும் மிகக் குறைவான மான-ரோசத்தை, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சுருக்கமாக இரண்டே வரிகளில் அய்யாவின் மானத்தைக் வாங்கிவிட்டு அமரும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்றோடு அய்யாவின் மானம் இறுதிசெய்யப்பட்டு அவமானப்படுத்த முடிவுசெய்துள்ளதால், தேர்தலுக்குப் பார்த்துகொள்ளலாமென்று தாமதப்படுத்தாமல் இன்றே அனைவரும் தவறாமல் மள மளவென்று அய்யாவை மண்ணைக் கவ்வ வைக்க அழைக்கிறேன்....
Murug - சவுத்CarolinaUSA,யூ.எஸ்.ஏ
2010-08-27 02:06:26 IST
ஒரு தலைவன் சமுதாயத்தில் உள்ள அணைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைப்பவனாக, சமுதாயத்தில் பிரிவினை உணர்வை தூண்டாதவனாக இர்ருகவேண்டும். உன்னுடைய எந்த ஒரு கொள்கையும் அனைவராலும் ஏற்று கொள்ள முடியாது. இம்முறை உனக்கு நீ எதிர் பார்த்த "பெட்டி" கிடைக்கவில்லை. அதனால் நீ வன்னியர்கள் முன்னேற்றம் என்றெல்லாம் உளறுகிறாய். வன்னியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இன்னும் உன்னை நம்புவதற்கு.....
raju - ரஷ்யா,இந்தியா
2010-08-27 01:33:09 IST
கேட்கிறதுக்கு நல்லதான் இருக்கு 2011 க்கு பிறகு நீங்க எங்க இருப்பியன்னு தெரியாதே. காட்டுக்கு மரம் வெட்ட போலாம்னா இப்ப தமிழ் நாட்டுல அதுவும் இல்லாம போச்சு...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-27 01:28:49 IST
இவனோட பேச்ச கேட்டா ரொம்ப எரிச்சலா இருக்கு. சரியான மாங்காமடையன். தேர்தல்கமிசன் சரியான சின்னத்தைதான் இவனுக்கு கொடுத்து இருக்கு. மாங்கா மடையன் நடத்துற கட்சிக்கு மாங்கா சின்னம். இவன் இப்படி வன்னியன் வன்னியன்னு பேசியே வெறுப்பேத்துறான். இவனோட பேச்ச கேட்டுகேட்டே இப்போ வன்னியன்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு. வன்னியன் அப்படினாலே, ஒரு வேலை இவனும் சாதி வெறி புடிச்ச மிருகமா இருப்பானோ? இவனும் அந்த வீணா போன தாஸு பயமாரி லூஸா இருப்பானோ? இவன பாத்தாலும் ஜாதி வெறி புடிச்ச காட்டுமிராண்டி மாறி தெரியிது. எதுக்கும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம். காட்டுபய. அப்படின்னு எல்லாம் நினைக்கு தோணுது. இப்படி ஒவ்வொருத்தரா நினைக்க ஆரம்பிச்சு கடசில அது வெறுப்பாவே மாற போவுது. வன்னிய மக்களே தயவு செஞ்சு இவன பேச விடாதீங்க. நம்ம ஊருல 1000 ஜாதிங்க இருக்கு. அவங்க எல்லாம் இப்போ மேல போகலையா. அவங்க எல்லாம் இப்படிதான் செட்டி ஒட்டு கெட்டி, ஐயிரு ஒட்டு அயிருக்கே, கவுண்டன் ஒட்டு கவுண்டனுக்கு, நாயக்கர் ஒட்டு நாயக்கருக்கு, நாய்டு ஒட்டு நாயடுக்குன்னு சொல்லி சொல்லி வெறுப்பேத்தியா மேல போனாங்க. இவன் உங்கள ரொம்ப கேவலமா உபயோகபடுத்துறான். ஜாதிய சொல்லி தூண்டி விட்டா நம்ம ஆளுங்கள கவுத்திடலாம்ன்னு நல்லாவே தெரிஞ்சு வெச்சுகிட்டு இப்படி எல்லாம் பேசுறான். இவனோட உண்மைய புரிஞ்சுகோங்க. இவனுக்கு ஒரு ஓட்டு கூட போடாம ஓட ஓட விரட்டுங்க. அப்புறம் உங்க இஷ்ட்டம். பெரிய கட்சிங்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்க எங்கள என்ன கொடும பண்ணினாலும் சரி, இவன மட்டும் கூட சேத்துக்காதீங்க. நீங்களும் தோத்துடுவீங்க....
கனகராஜ். ப - erode,இந்தியா
2010-08-27 01:20:58 IST
திரிசங்கு உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ ஊ ஊஉ ஊஉ ஊ உ ஊ உ உ ஊஉ உ உ ஊ உ ஊ ஊ உ உ உ ஊஊஉ ஊஊ ஊ உ ஊஊ ஊ உ .........
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-27 01:11:25 IST
தமிழகத்தில் எந்த ஜாதிக் கட்சியும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. நீங்கள் பெற்ற வெற்றிகளும் மற்றவர்கள் தயவில் கிடைத்த தற்காலிக வெற்றிகள் தான். மேலும் அந்த சமயங்களில் நீங்கள் வன்னியர் கோஷத்தினை கைவிட்டு நாங்கள் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் என பறைசாற்றி கொண்டதும் ஒரு காரணம். இதற்கு பா.ஜ.க. முஸ்லீம் லீக் கட்சிகள் கட்சிகள் கூட விதிவிலக்கு அல்ல. நீங்கள் இப்பொழுது மறுபடியும் வன்னியர் கோஷத்தினை கையில் எடுத்து இருப்பது உங்கள் கட்சியின் வளர்ச்சியை பின்னோக்கிய பாதையில் தான் கொண்டு செல்லும். இந்த உண்மையினை இனி வரும் காலங்களில் உள்ள தேர்தல் முடிவுகள் உங்களுக்கு உணர்த்தும்....
Erode சிவகிரி - Erode,இந்தியா
2010-08-27 01:11:02 IST
நீ சும்மா இருக்கவே மாட்டியா. உன்னோட கொள்கை தான் உலகத்துக்கே தெரியுமே. Electionukku Election கூட்டணி மாறுவது தான உன்னோட கொள்கை. உனக்கு வெட்கமே இல்லையாடா. இனி பாரு தினமலர் viewers'oda comments'a ....
2010-08-27 01:10:55 IST
100 இடங்களில் மட்டும் தானா? மீதியுள்ள 134 இடங்கள் என்ன பாவம் செய்தது?எல்லா இடங்களிலும் நின்றால் தமிழக மக்கள் அனைவரும் அந்த கொஞ்ச நாட்களாவது கவலையை மறந்து சிரிப்பார்கள்.திண்டிவனத்தாரே கொஞ்சம் கருணை காட்டுங்கள்....
மரமண்டை - tamilnadu,இந்தியா
2010-08-27 01:07:33 IST
"கிராமம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்கள் மூலம் பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் விளக்கப் பட்டு வருகின்றன" என்ன கொள்கை இருக்குனு டாக்டர் விளக்க போறாரு !! எப்புடி தாவுரதுன்னா? or மரம் வெட்டுறது எப்புடினா ? போங்க பாஸ் !!! வன்னியர் ஓட்டு வன்னியர் கு தானாம்!! ஏன்டா இந்த சாதி வெறி , உங்களத்தான் இன்னும் மக்கள் சாதி, சாதிநு திரிரங்க!! மக்கள் எல்லாரையும் ஒன்னா இருக்க விட மாட்டேங்கla !! நீயெல்லாம் ஒரு டாக்டர் ?!!... 
mayil - NJ,யூ.எஸ்.ஏ
2010-08-27 00:53:35 IST
100 என்ன 100க்கு மேல உனக்கு கமெண்ட்ஸ் வரும். Count down starts -மயில்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக