திங்கள், 23 ஆகஸ்ட், 2010

Facebook பேஸ்புக் காதலால் ஏமாந்த தமிழ் மாணவி தற்கொலை!வெள்ளவத்தை தமிழ் பாடசாலையில் 11ம் வகுப்பில்

பேஸ்புக் காதலால் ஏமாந்த மாணவி தற்கொலை!


பேஸ்புக் மூலம் லண்டனில் உள்ள இளைஞனுடன் காதல் கொண்ட மாணவி தற்கொலை செய்து கொண்டார். கொழும்பு வத்தளையை வதிவிடமாக கொண்ட 19 வயதுடைய மேற்படி மாணவி வெள்ளவத்தை தமிழ் பாடசாலையில் 11ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார்.

இவர் கடந்த ஆறு மாதங்களாக லண்டனில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார் என்றும், அவ் நபர் கடந்த 2ம் திகதி லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமது பெற்றோரை பார்ப்பதற்காக குறுகிய கால விடுமுறையில் வந்திருந்தபோது காதலுடன் இணைந்து யாழ் சென்று காதலின் பெற்றோரை பார்த்து வந்துள்ளார்.
காதலன் தனது விடுமுறையை நிவர்த்தி செய்து கொண்டு லண்டன் திரும்பியதும் மேற்படி மாணவியுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், பலமுறை மாணவி முயற்சி செய்தும் தனது காதலனிடம் இருந்து தொடர்பு கொண்டும் பதில் எதுவும் கிடைக்காத நிலையில் ஏமாற்றமடைந்த மேற்படி மாணவி கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தார். காதலனின் பதில் கிடைக்காததினால் ஏமாற்றமடைந்த மாணவி வத்தளை ஹந்தலவில் அமைந்துள்ள தமது வீட்டின் சிலிங் பானில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தாயாரின் சேலையில் சுருக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட பெற்றோர் அவரை மீட்டு உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு விரைந்தபோதும் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் மேற்படி மாணவி இறந்துவிட்டதாகவும் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக