சனி, 7 ஆகஸ்ட், 2010

Ex. பெண் புலிகள் கலை நிகழ்ச்சி விரைவில் அரங்கேற்றம்

முன்னாள் பெண் போராளிகள் நூறு பேரைக் கொண்ட குழுவினன் நிகழ்ச்சகளை கொழும்பில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்
இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சகல மட்டங்களிலும், சகல பிரதே சங்களிலும் எடுத்துவருகின்றது. அந்த வகையில், முன்னாள் போராளிகள் நூறு பேரைக் கொண்ட குழு வொன்றின் கலைநிகழ்ச்ச விரைவில் கொழும்பில் நடத்தவிருக்கின்றோம்.
இதன்போது குறுக்கிட்ட ரவி கருணாநாயக்க எம்.பி., அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை என்று கூறுகின்றீர்கள். அவ்வாறென்றால் இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு மட்டும் உங்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றதென்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இக் குழுவினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பலர் முன்வந்துள்ளனர். அதேபோல, இந்த நிகழ்வுகளுக்கு பலர் உதவுகின்றனர். இவை தொடர்பிலான மேலதிக விபரங்களை வடக்குப் படையணிக்கு பொறுப்பான அமைச்சிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக