வியாழன், 26 ஆகஸ்ட், 2010

DNA test, ஹிட்லர் யூத-வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர்

ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் யூத மற்றும் வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்று டி.என்.ஏ. சோதனைகளி்ல் தெரியவந்துள்ளது.

ஜெர்மன் இனத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தவர் ஹிட்லர்.

இந் நிலையில் ஹிட்லரின் 39 உறவினர்களின் எச்சிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏக்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் யூத இனத்தோடும், வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியைச் சேர்ந்த பெர்பர்ஸ் இனத்தினரோடும் உயிரியல்ரீதியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளரான ஜூன் பால் முல்டேர்ஸ் டி.என்.ஏ. ஆய்வை நடத்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்கில் வசிக்கும் ஹிட்லரின் தங்கை வழி பேரனான அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் (வயது 61), ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹிட்லரின் சித்தி மகனான நார்படர்ட் உள்பட 39 பேரிடமிருந்து இந்த டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

இதில் Haplogroup E1b1b என்ற 'ஒய் குரோமேசோம்' இருந்தது. இவை ஜெர்மானியர்களில் பொதுவாகக் காணப்படாத குரேமோசோம் ஆகும். இவை யூதர்கள், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்க இனமான பெர்பர்ஸ் இடையே மிக அதிகமாகக் காணப்படும் குரோமோசோம் ஆகும்.

ஹிட்லருக்கு சுமார் 20 தலைமுறைகளுக்கு முன் அவரது முன்னோர்கள் யூத மற்றும் வடக்கு ஆப்பிரிக்க இனத்தினரைச் சேர்ந்தவர்களாக
 இருந்திருக்கலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பதிவு செய்தது: 26 Aug 2010 12:29 am
சில சமயம் எனக்கும் தவறு ஏற்ப்படும்.

பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 25 Aug 2010 11:56 pm
தமிழக இட ஒதுகேட்டுக்கு உலகில் ஓர் உதாரணம் கூற வேண்டும் என்றால், அது இட்லராகதான் இருக்க முடியும். ஜெர்மனியை, உலகின் நிதி நிலையை யூதர்கள் கட்டுப் படுத்துவதாக இட்லர் கூறினார்.அவர்களை அணைத்து பதவிகளிலும் இருந்து தூக்கி எறிந்தார்.கருணாவும் தன ஆட்சி அலங்கோலங்களை சுட்டி காட்டினாள் பிராமணர்களை திட்டுகிறார். பிராமணர்கள் பிச்சை எடுத்தாலும் பாத்து பைசா கொடுத்து உதவாத அரசை நடத்துகிறார்.69 சதா வீத இட ஒதுக்கீடு மூலம் அவர்களை கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக