செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நோர்வேயில் மேற்கொள்ளப்பட்ட வங்கி கொள்ளைகள் யாவும் புலிகளின் தலையில்.

நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி புகைப்படத்துடன் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் நோர்வேயில் இயங்கிவந்த துப்பரவு செய்யும் நிறுவனம் ஒன்று 64 மில்லியன் குறோனர்களை வங்கியில் மேலதிக கடனாக பெற்றுவிட்டு நிறுவனம் நஷ்டமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குளை பரிசீலனை செய்த அதிகாரிகள் இவ் நிறுவனம் 183 நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன் அது நஷ்டமடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை எனவும் அதிக லாபங்களே காணப்படுவதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதையடுத்து நிறுவனத்தின் இயக்குனரை நோர்வே புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாகவும் அவ்விசாரணைகளின் போது , தனது குடும்பத்தில் பத்துபேர் புலிகளியக்கத்தில் இருந்தாகவும் அவர்களுக்கு நிறுவனத்தால் வந்த பணங்கள் யாவற்றையும் அனுப்பிவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. இவ்வாறு பெரு மோசடிகளை செய்த பேர்வழிகள் யாவரும் தற்போது தமது மோசடிகளுக்கான பொறுப்பினை புலிகள் தரப்பின் மீது சுமத்தி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் புலிகள் தொடர்பான சாட்சியங்களை தமிழர் தெரிந்தோ தெரியாமலோ சிறப்பாக வழங்கிவருகின்றனர் என்பதற்கு இது சிறந்ததோர் உதாரணமாகும்.

அத்துடன் குறிப்பிட்ட செய்தி அச்செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது. அச்செய்தி தொடர்பாக தனது கருத்தினை பதிவு செய்துள்ள நோவேஜிய பிரஜை ஒருவர் அல்கைதா , எல்ரீரீஈ , கமாஸ் , அன்சார் அல் இஸ்லாம் போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நோர்வே அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கான அறுவடையை செய்து கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக