சனி, 28 ஆகஸ்ட், 2010

மது போதையில் சாலையில் கவிழ்ந்த பெண்-சில்மிஷம் செய்த வாலிபர்கள்-விபரீதமாகும் கலாச்சாரம்

சென்னை : குடிபோதையில் நடக்க முடியாமல் நடுத் தெருவில் விழுந்து அலங்கோலமான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் நான்கு வாலிபர்கள். அவர்களைப் பிடித்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அவரது தாயாரை வரவழைத்து கண்டித்து ஒப்படைத்தனர்.

மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை, குறிப்பாக நவ நாகரீக மோகத்தில் திளைத்து நீந்தி வரும் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.

சென்னை நகரில் குடிபோதையில் மிதக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கும் பெண்களின் நிலையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் சைதாப்பேட்டைஉள்ளிட்ட சில பகுதிகளில் குடிபோதையில் பெண்கள் தெருவில், சாலையில் விழுந்து மீட்கப்பட்ட கதையை மக்கள் பார்த்தனர். இந்த நிலையில் தி.நகரில் ஒரு கல்லூரி மாணவி குடிபோதையில் கீழே விழுந்து கிடந்தார். பறிபோகவிருந்த அவரது கற்பை மயிரிழையில் போலீஸார் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் அமுல்யா. 21 வயதாகும் இவர் கே.கே.நகரைச் சேர்ந்தவர். ராயபுரத்தில் இவருக்கு ஒருகாதலர் இருக்கிறார். இருவரும் தி.நகருக்குச் சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் செமத்தியாக குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில்காரில் கிளம்பினர்.

அதிகாலை 3 மணியளவில் அந்தப் பெண்ணை, அவரது காதலர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை முன்பு இறக்கி விட்டு விட்டு கிளம்பினார். காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து விட்டார்.

அரை குறை உடையுடன், உடைகள் அலங்கோலமாக கிடக்க கீழே விழுந்து கிடந்தார் அந்தப் பெண். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.

அலங்கோலான நிலையில் கீழே கிடந்த பெண்ணை நெருங்கி செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர். இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. இதைப் பார்த்த நான்கு பேரும் ஓட முயற்சித்தனர். ஆனால் ஒருவரை மட்டும் போலீஸார் பிடித்துவிட்டனர்.

பின்னர் அமுல்யாவை தூக்கி வேனில் போட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காலை ஆறு மணியளவில் அவருக்கு மயக்கம் தெளிந்தது.தான் எங்கு படுத்திருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பினார். அவரிடம் நடந்ததைக் கூறினர் பெண் போலீஸார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார் அமுல்யா.

பின்னர் போலீஸார் அமுல்யாவின் வீட்டைத் தொடர்பு கொண்டு அவரது தாயாரை அழைத்தனர். அவர் ஓடோடி வந்தார். அவரிடம் அமுல்யாவை ஒப்படைத்த போலீஸார் இனிமேல் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அதேபோல அமுல்யாவிடம் செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபட முயன்று சிக்கிய வாலிபரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

அமுல்யாவை ஹோட்டலில் வைத்தே இந்தநான்கு பேரும் பார்த்துள்ளனர். நடக்கக் கூட முடியாத நிலையில் அவர் காதலருடன் போவதைப் பார்த்து பின் தொடர்ந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

எங்கே செல்கிறது தமிழ்நாட்டுக் கலாச்சாரம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக