செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

யாழ். குருநகர் உயர்பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்டு வீதி திறக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டனர்

யாழ். நகர மத்தி குருநகர் பிரதேசத்தில் உள்ள ஜே 68 மற்றும் ஜே 69 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளான இதுவரை உயர்பாதுகாப்பு வலயமாக விளங்கிய றெக்கிளமேசன் கிழக்கு மற்றும் றெக்கிளமேசன் மேற்கு பகுதிகள் இன்றையதினம் பொதுமக்கள் மீளக்குடியமர விடுவிக்கப்பட்
வரவேற்பினைத் தொடர்ந்து புதிய கடற்கரை வீதி என்ற பெயர்ப்பலகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரினால் திரைநீக்கம் செய்;து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட அரங்கில் யாழ். பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க 51வது படையணி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம ஆகியோருடன் மீளக்குடியமருவதற்காக வருகை தந்திருந்த பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக