வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அரிசியை இலவசமாக தருவது சுலபமல்ல : அமைச்சர் பவார்

புதுடில்லி:"அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, வறுமையில் வாடும் மக்களுக்கு அவற்றை இலவசமாக வழங்கலாம் என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த முடியாது' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.

மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் கூறியதாவது:அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அதிகமான உணவுப் பொருட்கள் கெட்டு வீணாகி விட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாயின.

இது குறித்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், "பாதுகாப்பாக சேமிக்க முடியாத அளவுக்கு மீந்துபோயுள்ள உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வினியோகிக்கலாம். இதனால், உணவுப் பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் போவதை தவிர்க்க முடியும்' என, தெரிவித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் கூறியது போல், உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை. மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்காக, "அந்தோதயா அன்ன யோஜனா' என்ற திட்டத்தை அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. ஒரு கிலோ கோதுமையை, 16 ரூபாய் விலை கொடுத்து வாங்கி, அதை இரண்டு ரூபாய்க்கு மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். எனவே, சுப்ரீம் கோர்ட் கூறியதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு சரத் பவார் கூறினார்.
பாலன் - Seremban,மலேஷியா
2010-08-20 05:20:26 IST
நமது நாட்டின் தற்போதைய தலைவிதிகளில் சரத் பாவர் உணவு அமைச்சராக இருப்பதும் ஒன்று. இதற்கு மிக முக்கிய காரணம் நாம் இன்னும் அந்நிய தலைமையின் கீழ் வாழ்வதுதான்....
Vaidyanathan - Hyderabad,இந்தியா
2010-08-20 05:19:17 IST
மனம் குமுறுது இந்த ஊழல் பெருச்சாளி சொல்வதை பார்த்தால். அதே 16 ரூபாய்க்கு மற்ற கார்டு காரர்களுக்கு தரலாம். பதுக்கல் பெருச்சாளிகள் வாடுவார்கள் என்ற பயமோ. நீதிபதிகளை விட பெரிய ஞாயம் தெரிந்தவரா இந்த ஐயோ , நான் என்ன சொல்ல....
ம.குமார் - கோவிந்தபளையம்,இந்தியா
2010-08-20 05:00:37 IST
பேச்சு மட்டும் போதாது. செயல்லே காட்டு. இல்லையின செஞ்சிட்டு பேசு சும்மா ரீல் ஓட்டாதே....
Sathish - NinhBinh,வியட்னாம்
2010-08-20 04:51:14 IST
சுப்ரிமே கோர்ட் சொன்னது முற்றிலும் உண்மே. Instead of wasting can give to disabled and poor peoples. Still there are the people who don't have food....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-20 03:38:15 IST
யோவ், என்னையா பிக்காளி தனமா பேசிகிட்டு இருக்க. இலவசமா தரது சுலபமில்லையா? உனக்கு தெரில்லன்னு சொல்லு, ஒத்துக்கிறேன். அதுக்காக இலவசம் சுலபமல்ல ன்னு பீலா விடாத. இங்க இலவசத்துக்கு ஒரு பல்கலை கழகமே இருக்கு. அந்த கழகத்தில வந்து பாடம் படிச்சிட்டு போ. அப்போ தெரியும் உனக்கு. அவன் அவன் இந்த இலவசத்த வெச்சு ஆறு கோடி மக்களை ஆட்டி வெச்சுகிட்டு இருக்கானுவ, இந்த ஆளு என்னடான்னா இலவசமா கொடுக்க முடியாதுன்னுட்டு. எங்கள பொறுத்தவரை இலவசமா முடியாதது ஒன்னும் இல்லை. கேவலம் ஒரு பத்து கிலோ கோதுமய கொடுக்கிறதுக்கு அழுவுற....
ர.ச.Mathusoothan - Nashville,யூ.எஸ்.ஏ
2010-08-20 03:32:01 IST
உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு இலவசமாக அரிசியை வழங்கலாம் அரிசி சேமித்து வைத்து கெட்டு வீணாவதை விட என்று கூறியிருப்பது நன்றாக சட்ட வல்லுனர்கள் யோசித்து முடிவேடுதிருப்பதாக தான் இருக்கும்.கெட்டு வீனாலும் நாட்டில் ஏழைகள் முன்னேறி விட கூடாது என்று அரசியல் வாதிகள் நினைப்பது நமது நாட்டு இயல்பு தான். அதில் உள்ள சிரமங்களையிம் பவார் விளக்கினால் நன்றாக இருக்கும். பணம் வாங்கி விற்பது சுலபம் என்றால் இலவசமாக் koduppathum சுலபம் தான்....
பரத் சவார் - nayadelhi,இந்தியா
2010-08-20 03:06:23 IST
how stupid this guy (சரத் பவார்) is?!!!!!!!...
கார்த்திக் - Madras,இந்தியா
2010-08-20 02:49:07 IST
இலவசமாக கொடுப்பது சுலபமில்லை ஆனால் கோதுமை, அரிசி கெட்டு போன பின் குப்பையில் எறிவது சுலபமோ? இது என்ன கிரிக்கெட் விளையாட்டா?...
அ.சிவகுமார் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-08-20 01:41:35 IST
அவர் வாயைப்போல பல சிக்கல் இருக்கும் போல....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக