வியாழன், 26 ஆகஸ்ட், 2010

புலிகளின் அராஜகத்திற்கெதிராக போராடி தமது உயிரைப் பலிகொடுத்த மாற்றமைப்பின்

by teavadai முன்னால் புலிகளுக்கு ராஜவாழ்க்கை: புலியை எதிர்த்துப்போராடியவர்களுக்கு நரகவாழ்க்கை
முன்னால் புலிகள் அரசாங்கத்துடன் சேர்ந்தால் அவர்களுக்கு ராஜவாழ்க்கை. கருணா பிள்ளையான் கே.பி வரை இந்த உண்மை புலப்படுகிறது. தமிழீழம் எங்கள் தாகம் என ஒரு காலத்தில் குரல் கொடுத்துவிட்டு 90 பாகையில் கரணம் அடித்து அரசாங்கத்துடன் சேரும் பட்சத்தில் இந்த பொன்னான வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.  அமைச்சர் பதவி, முதலமைச்சர் பதவி, என வரிசையாக பதவிகள் காத்துக் கிடக்கின்றன. செய்யவேண்டியது என்னவெனில் தமிழீழ தாகத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மட்டும்தான்.
சரி அது போகட்டும். புலிகளை எதிர்த்துப்போராடி தமது போராளிகளையும் கட்சி உறுப்பினர்களையும் இழந்து நிற்கும் மாற்றுக்கட்சிக்காரர்களின் நிலமை என்ன?. ஒண்டும் கிடையாது. புலிகளிடமிருந்து ஒட்டுக்குழு துரொகிகள் என்கிற பட்டங்கள்தான். புலிகளால் கொல்லப்பட்ட இந்த அமைப்புக்களின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு எதுவும் கிடையாது. புலிகளிடமிருந்து துரொகிப் பட்டங்களும் அரசிடம் இருந்து எதுவித நட்ட ஈடும் கிடைக்காமல் கஞ்சி குடித்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
அரசு புலிகளை தோற்கடித்தது என்னவோ உண்மைதான். பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை பலிகொடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால் கடந்த 30வருடங்களுக்கு மேலாக புலிகளின் அராஜகத்திற்கெதிராக போராடி தமது உயிரைப் பலிகொடுத்த இந்த மாற்றமைப்பின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ஏதாவது உதவி செய்ய அரசு முன்வரவேண்டும். அரசு தொழில் வாய்ப்புக்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
எந்த அராஜகங்களுக்கு எதிராக போராடினார்களோ அந்த அராஜகங்களுக்கு ஒரு காலத்தில்  துணைபோனவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. பதவிகள் கிடைக்கின்றன. ராஜமரியாதை வழங்கப்படுகின்றன. இந்த அராஜகங்களுக்கு பலியானவர்கள் கடைக்கோடியில் காய்ஞ்சு போய்க் கிடக்கிறார்கள். கவனிப்பாரற்று போய்விட்டார்கள். இவர்களது தியாகங்கள் விழலுக்கிறைத்த நீர்போல் ஆகிவிட்டது.
புலி என்கிற தமிழ்சமூகத்தின் மாபெரும் நச்சு மரத்தை விழுத்துவதற்கு போரடியவர்கள் பற்றிய விபரங்களை அரசு அந்தந்த அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும். அந்தக்குடும்பங்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
அதைவிடுத்து புலிகள் வீழ்ந்தவுடன் அரசிடம் சென்று வாலாட்டிக்கொண்டிருக்கும் புலிப்பெருச்சாளிகளுக்கு எந்தச் சலுகைகளும் பதவிகளும் வழங்கக்கூடாது. ஏனெனில் இவர்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்பவர்கள். நாளை அரசுக்கெதிராகவும் மாறவும் தயங்க மாட்டார்கள்.
புலம்பெயர்நாடுகளில் இத்தகைய பெருச்சாளிகள் நிறையவே இருக்கின்றன. அரசுக்குரிய கடமைப்பாடு என்னவெனில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி புலிகளுக்கெதிராக போராடியவர்களுக்கும் புலிகளால் மரணித்தவர்களுக்கும்  தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாகும். ஒரு வகையில் நாட்டுக்காக போராடி மரணித்த வீரர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.
தமிழ்ச்சமூகம் இன்னும் புலிகளின் மூளைச்சலவையில் இருந்து முற்று முழதாக மீளவில்லை. மாற்று  அமைப்பைச் சேர்ந்தவர்களை துரொகிகளாக மக்களின் மனதில் புலிகள் விதைத்து விட்டுப்போன விதை இன்னும் இருக்கிறது. இந்த நிலமை மாற்றப்படவேண்டும். மக்களிடையே புலிகள் செய்துவிட்டுப்போன பொய்ப்பிரச்சாரங்கள் களையப்பட வேண்டும். தமிழ்ச்சமூகம் எத்தனையே அற்புதமான மனிதர்;களை புலிகளால் இழந்திருக்கிறது என்கிற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும். புலிகளை எதிர்த்து வாழ்க்கையை தியாகம் செய்த மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். எழுதப்படுகின்ற புதிய வரலாறு இந்த உண்மைகளை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் தமிழ்ச்சமூகத்தின் இளைதலைமுறை வன்முறையற்ற ஒரு புதிய பாதைக்கு செல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக